கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டார வேளாண்மைத்துறை சார்பில் வருகின்ற சம்பா நடவு பருவத்திற்காக விவசாயிகளுக்கு வயல் தயார்படுத்துதல் குறித்த ஆலோசனைகள், வழிக்காட்டல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி சம்பா நடவுப்பருவத்தில் அரசு வேளாண்மைத்துறை அதிகாரிகளின் ஆலோசனைகளைப்பெற்று, சரியான பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயிகள் அதிக மகசூல் எடுக்கவேண்டும் என்பதை இலக்காக கொண்டு அதிகாரிகள் நேரடி களஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.இவ்வாறான நிலையில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரம் மூலம் அனைத்து சத்துக்களும் வயலுக்கு கிடைக்க காரணமாக இருக்கும் தக்கைப்பூண்டுவினை விவசாயிகள் பயன்படுத்தவேண்டும் என அறிவுறுத்தியும் வருகிறார்கள்.அதன்படி வெள்ளாறு பாசன வடிகால் பகுதி சேத்தியாத்தோப்பில் 45 ஹெக்டேர்க்கு ஒரு ஹெக்டேர்க்கு 40கிலோ வீதம் தக்கைப்பூண்டு வழங்கப்பட்டது.இதுபோல் புவனகிரி வட்டாரத்தில் கீழ்கொள்ளிட பாசன வடிகால் திட்டத்தின்படி புவனகிரி அருகே மேலசொக்கநாதன்பேட்டையில் 19 ஹெக்டேர்க்கு ஒரு ஹெக்டேர்க்கு 40 கிலோ வீதம் தக்கைப்பூண்டு வழங்கப்பட்டது.இதனை நீர்வள நிலவள மேம்பாட்டுத்திட்டம்20&21படி புவனகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுதமதி தலைமையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் துணைவேளாண்மை அலுவலர் மணி,உதவி வேளாண்மை அலுவலர் வரதராஜன், ரமேஷ்,நித்தியானந்தம் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.விவசாயிகள் மானிய விலையில் தக்கைப்பூண்டு பெற்றிட தங்கள் பகுதி வேளாண்மை அதிகாரிகளை அனுகி பரிந்துரை சீட்டைப்பெற்று புவனகிரி வட்டார வேளாண்மைத்துறையை அனுகி பெற்று பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Thursday, July 16, 2020
புவனகிரி வட்டார வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு தக்கைப்பூண்டு வழங்கப்பட்டது

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...