கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே காட்டுமன்னார்கோவில் வட்டம் ஒன்றியம் மாமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மேல்பாதி கிராமத்தில் பெருமாள் குளம் இருந்து வருகிறது.இக்குளம் கடந்த 15 ஆண்டுகாலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.மேலும் தூர்வாரப்படாமலும் இருந்தது. இது குறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் வெற்றி வீரன் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டவர்களிடம் பலமுறை மனு கொடுக்கப்பட்டது.மாமங்கலம் கிராமமக்களின் கோரிக்கையை பரிசீலனைக்கு ஏற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் இது சம்பந்தமாக சம்மந்தப்பட்ட பெருமாள் குளக்கரையை அளவீடு செய்து தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்பேரில் காட்டுமன்னார்கோயில் வருவாய் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து அங்கு உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்பு குளம் வெட்டுவதற்காக அதனை அளவீடு செய்து ஜேசிபி இயந்திரம் மூலம் குளம் தூர்வாரும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் தலைமையில், வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்ராஹிம், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் சோழத்தரம் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா, மாமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் எழிலரசன், ஊராட்சி செயலாளர் நாகராஜன் கிராம பணியாளர்கள் மாமங்கலம் வரதராஜன், கொண்டசமுத்திரம் சிவக்கும,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ் , வட்ட குழு உறுப்பினர்கள் வெற்றிவீரன், நமச்சிவாயம்
கேபிகுமார் சமூக ஆர்வலர், செய்தியாளர் பாலமுருகன் உள்ளிட்டவர்களுடன் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சோழத்தரம் காவல்துறை சார்பில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நீண்ட காலம் ஆக்கிரமிப்பில் இருந்து குளம் தூர்வாரப்பட்டுள்ளதால் மாமங்கலம் கிராமமக்கள் அதிகாரிகளுக்கு தங்களது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.