உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, July 24, 2020

வாழைக்கொல்லை அரசுப்பள்ளி மாணவர்கள் தேசிய வருவாய் வழிதிறன் படிப்பு உதவித்தொகை தேர்வில் மாவட்டத்தில் முதலிடம்





கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  8ஆம் வகுப்பு மாணவர்கள் தேசிய வருவாய் வழிதிறன் படிப்பு உதவித்தொகை தேர்வினை கடந்த எழுதினார்கள்.அரசுப்பள்ளி,அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதலாம் இதில் இப்பள்ளி மாணவர்கள்  எட்டுபேர் தேர்வு பெற்றனர்.கடலூர் மாவட்டத்தில் மாணவி அபிநயா அதிக மதிப்பெண் எடுத்ததால் மாவட்டத்தில் இப்பள்ளி மதிப்பெண் அளவிலும், அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாலும் முதலிடம் பிடித்தது.இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அவர்களின் 9 லிருந்து 12ஆம் வகுப்பு வரை நான்கு ஆண்டுக்கு  மத்திய அரசு ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்குகிறது.இப்பள்ளியில் கடந்த எட்டாண்டுகளில் மொத்தம் 37 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்க பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.








நிகழ்ச்சியில் வட்டாரக்கல்வி அலுவலர் குமார் தலைமை வகித்தார்.தலைமை ஆசிரியர் புஷ்பராஜ் அனைவரையும் வரவேற்றார்.வாழைக்கொல்லை ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயந்தி குறளரசன், துணைத்தலைவர் புகழேஸ்வரன், அரிமா சங்க மாவட்ட தலைவர் முனைவர் மணிமாறன்,இளஞ்செழியன் முன்னிலை வகித்தனர்.இது குறித்து மாணவர்கள் தெரிவிக்கும்போது இந்த தேர்வின்மூலம் தங்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது என்றும், பின்னாளில் எத்தகையை தேர்வினையும் தங்களால் தைரியமாக எழுதமுடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.








மேலும் தவசெல்வன்,அருள்செல்வன், ஆசிரியைகள் அன்பகம், வள்ளி,கீதா,கிருத்திகா, கிராமபொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கருணாகரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.