உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, July 24, 2020

புவனகிரியில் பாஜக போஸ்டரில் சாணம் அடித்தவரால் பரபரப்பு கறுப்பர் கூட்ட சதியா? போலீஸ் விசாரணை

புவனகிரியில் நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவராக பதவியேற்ற நன்றி அறிவிப்பு போஸ்டரில் புவனகிரி சார் பதிவாளர் அலுவலகம் எதிரே பதிவு எழுத்தர் பணி செய்யும் புவனகிரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த சந்திரமோகன் என்பவர் பாரதப் பிரதமர் மோடி முகத்தில் சாணம் பூசி விட்டார். இது குறித்து பாஜக மாநில தலைமை மாநில தலைவர் எல்.முருகனுக்கும், கடலூர் மேற்குமாவட்ட பாஜக தலைவர் கேபிடி இளஞ்செழியனுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சித் தொண்டர்கள் ஒன்று திரண்டனர்.பாஜகவின் மாவட்ட துணைத்தலைவர் வெற்றிவேல் புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.உடனடியாக புகாரைபெற்றுக்கொண்டதற்கான சிஎஸ்ஆர் ரசிதியை வழங்கப்பட்டது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் தியாகு, நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, ஒன்றிய தலைவர் ராமநாதன், மூத்த நிர்வாகி கனகராஜ், ஒன்றிய முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் திருஞானம், சண்முகம், ஒன்றியநிர்வாகிள் ராஜி, பன்னீர்செல்வம் மாவட்ட அணி பிரிவு தலைவர்கள் ராஜராஜன், ஜனதா ஜோதி ரவிச்சந்திரன், நாகராஜன், கந்தன், ஒன்றிய அணி பிரிவு தலைவர்கள் வேதகிரி, ராஜாராமன், இளைய மாறன், நகர நிர்வாகிகள் நடராஜன், திருமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மேலும் சாணம் வீசிய சந்திரமோகனுக்கும் கறுப்பர் கூட்டத்திற்கு தொடர்பிருக்கிறதா எனவும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.இச்சம்பவம் புவனகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.