உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, July 12, 2020

புவனகிரி பேரூராட்சி சார்பில் அலுவலகங்களுக்கு தீவிரமாக கிருமிநாசினி மருந்து தெளிப்பு



கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் தீவிரமாக கொரானோ நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை புவனகிரி பேரூராட்சி நிர்வாகத்தினர் எடுத்து வருகிறார்கள்.புவனகிரி மற்றும் அதன்சுற்றுப்புற பகுதிகளில் கொரானோ நோய்த்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஐ நெருங்கி வரும் நிலையில் புவனகிரி பேரூராட்சியின் அனைத்து வார்டு பகுதியிலும் கொரானோ நோய்த்தொற்று ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை எடுத்து வருகின்றனர்.அதன்படி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்பந்தத்தின் தலைமையில் பத்துக்கு மேற்பட்ட பேரூராட்சி பணியாளர்கள் புவனகிரி நகரிலுள்ள பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அரசு அலுவலகங்களான புவனகிரி காவல்நிலையம், புவனகிரி பேரூராட்சி அலுவலகம், புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,சார்பதிவாளர் அலுவலகம்,புவனகிரி வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொரானோ நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை பணியாக கிருமிநாசினி மருந்து தெளித்தனர்.மேலும் புவனகிரி நகருக்குள் வரும் அனைவரையும் முககவசம் அணிந்திருப்பதை உறுதி செய்துக்கொண்டே உள்ளே அனுமதிக்கின்றனர்.முககவசம் அணியாதவர்களுக்க அபாரதமும் விதிக்கப்படுகிறது.இதுபோன்று புவனகிரி பேரூராட்சியின் ஒலிபெருக்கி வாகனத்தின்மூலம் வெளிமாவட்டங்கள்,வெளிமாநிலங்கள் ஆகியவற்றிலிருந்து வருபவர்கள் தங்களைப்பற்றி விவரங்களை தெரிவித்து கொரானோ  நோய்த்தொற்று பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.