உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, June 17, 2020

சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் பொதுமக்களின் கேள்விக்கு பதிலளிக்க திணறிய நிர்வாகத்தினர்




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் சேத்தியாத்தோப்பு கிளாங்காடு, சென்னிநத்தம் பகுதிகளை சேர்ந்த ஆண்கள்,பெண்கள் திடிரென்று ஒன்று கூடினர்.அப்போது அவர்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் சென்று, சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் கிராமப்புற மற்றும் ஏழைய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட கோழிக்குஞ்சுகள் எங்களுக்கு ஏன் வழங்கவில்லை? என்று கேட்டனர்.மேலும் நாங்கள் முந்நூறுக்குமேற்பட்டவர்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து  வருகிறோம். எங்களை ஏன் பயனாளிகள் லிஸ்டில் சேர்க்கவில்லை? அரசின் இதுபோன்ற உதவி கிடைத்தால் எங்களுக்கு பயனளிக்கும்படியாக இருக்குமே என்று கேட்டனர்.அப்போது  அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்க திணறிய பேரூராட்சி நிர்வாகம் அவர்களுக்கு பொருத்தமில்லாத பதிலாக எல்லாம் முடிந்துவிட்டது.இனிமேல் பேசி என்னாகப்போகிறது? அடுத்தமுறை வந்தா பார்க்கலாம் என்று பதிலளித்துள்ளனர்.இதனால் வேதனையடைந்துள்ள கிளாங்காடு,சென்னிநத்தம் பொதுமக்கள் கூறும்போது தற்போது சேத்தியாத்தோப்பு பேரூராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களுக்கான எந்த பணிகளையும் விரைவாக செய்து தருவதில்லை.குறைகள் என்று போனால் திருப்பி அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.இந்த பிரச்னை என்று இல்லை நாங்கள் எந்த பிரச்னை என்று சென்றாலும் இப்படிப்பட்ட பதிலைத்தான் சொல்கிறார்கள்.தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எங்களுக்கு அனைத்து சேவைகளும், அரசு சிறப்பு உதவிகளும் கிடைக்க பெரும் முயற்சி எடுத்துவரும் நிலையில் இதுபோன்ற நிர்வாகத்தினர் அதை தடுப்பதுபோல் இருந்து வருகிறார்கள்.மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு எங்களின் குறைகளை தீர்க்ககூடிய வேறு அதிகாரியை நியமிக்கவேண்டும். அப்போதுதான் நாங்கள் அனைத்து சேவைகளையும் எளிதாக பெறமுடியும்.தற்போது தமிழக அரசின் ஊரக புறக்கடை கோழிவளர்ப்புதிட்டத்தில் விடுபட்ட முந்நூறுக்குமேற்பட்ட எங்களுக்கு சிறப்பு கவணம் செலுத்தி கோழிக்குஞ்சுகள் வழங்க நடவடிக்கை எடுத்தால் எங்களுக்கு பேரூதவியாக இருக்கும் என்று அவர்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்தனர்.