கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வெள்ளியக்குடி கிராமம்.இக்கிராமத்திற்கு சாத்தமங்கலம் கிராமத்திலிருந்து வெள்ளியக்குடி கிராமமுகப்பு சாலை வரை தற்போது புதிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது.இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை அடுத்து தற்போது புதிய தார்சாலை அமைத்துள்ளதற்கு இப்பகுதி மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.இந்நிலையில் இப்போது அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையின் ஓரத்தில் வழக்கமாக செம்மண்கொண்டு சாலை ஓரத்தை சரிசெய்யவேண்டும்.ஆனால் தற்போது சாலையின் ஓரத்தில் களிமண்கொண்டு சரிசெய்யப்பட்டுள்ளதால் இதனால் ஆபத்து நேரிடும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து அவர்கள் தெரிவிக்கும்போது இன்னும் சில நாட்களில் மழைக்காலம் துவங்க உள்ளது.அவ்வாறு மழைக்காலம் துவங்கும்போது சாலையின் ஓரத்தில் போடப்பட்டுள்ள களிமண்ணாது சாலையில் செல்வோருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.வாகனங்கள் சாலையின் ஓரத்தில் ஒதுங்கி செல்லமுடியாது.பெரும்விபத்தில் சிக்கிக்கொள்ள நேரிடும்.வழக்கமாக எல்லா சாலைப்பணிகளின்போதும் செம்மண்கொண்டு சாலையின் ஓரத்தினை சரிசெய்வார்கள்.ஆனால் இங்குபோடப்பட்டுள்ள சாலையில் செம்மண்போடாமல் களிமண்கொண்டு சாலை ஓரங்கள் சரிசெய்திருப்பது வேதனையாக இருக்கிறது.அதிகாரிகள் சாலையினை ஆய்வு செய்து எப்போதும்போல் செம்மண்கொண்டு சாலையின் ஓரங்களை சரிசெய்யவேண்டும் என அவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Saturday, June 20, 2020
சாலை ஓரத்தில் செம்மண் கொட்ட கோரிக்கை

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...