உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, June 20, 2020

சேத்தியாத்தோப்பு அருகே கருணாகரநல்லூர் கிராமத்தில் மக்காசோளத்தில் படைப்புழுதாக்கல் குறித்து செயல்விளக்கம்




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது கருணாகரநல்லூர் கிராமம்.இக்கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் கீழ்கொள்ளிடம் உபவடிகால் பகுதி நிலவள நீர்வள திட்டத்தின் கீழ் மக்காசோளத்தில் படைப்புழு மேலான்மை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.இதில் மண்டல ஆராய்ச்சி நிலைய  பேராசிரியர் தலைவர் முனைவர் மோதிலால் தலைமை வகித்தார். பின்னர் இவர் விவசாயிகளுக்கான மக்கா சோள கட்டுப்பாட்டிற்கான இனக்கவர்ச்சி பொறிகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.நீர்வள நிலவளத்திட்ட பொறுப்பு விஞ்ஞானி உழவியல் உதவி பேராசிரியர் முனைவர் அரிசுதன் மக்கா சோளத்தில் படைப்புழுவின் தாக்கல்குறித்து விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.பூச்சியியல் உதவி பேராசிரியர் முனைவர் இந்திராகாந்தி மக்காசோளத்தில் படைப்புழுதாக்கலைக்கட்டுப்படுத்த மக்கா சோளம் விதைப்பதற்கு முன்பு வேப்பம் புண்ணாக்கு இடுவதின்மூலம்  படைப்புழுவின் கூட்டுப்புழுவினை க்கட்டுப்படுத்தலாம். ஏக்கருக்கு 5 என்ற விதத்தில் இனக்கவர்ச்சி பொறிகளை அமைப்பதின்மூலம் படைப்புழுவின் ஆண் அந்துப்பூச்சியை கண்காணித்து கவர்ந்து அழிக்கலாம்.1 சதம் வேப்ப எண்ணை தெளிப்பதின்மூலம் படைப்புழுவினை இளம் பருவத்திலேயே கட்டுப்படுத்தலாம் என விளக்கம் அளித்தார்.நீர்வள நிலவள திட்ட பயணாளிகள் இச்செயல்விளக்கதினை அதிகாரிகளுடன் கலந்துரையாடி தங்களுக்கான சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொண்டனர்.நீர்வள நிலவள திட்ட இளநிலை ஆராய்ச்சியாளர் மணிக்கண்டன் இச்செயல்விளக்கத்திற்கான ஒருங்கிணைப்பை செய்திருந்தார்.மேலும் இதில் விவசாயிகள் பலரும் பங்கேற்றனர்.