கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் மின்நிறுத்தம் செய்யும் ஊராட்சி மன்றத்தலைவர்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழக அரசு கிராமப்புற மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையக்கூடாது என்று 24 நான்குமணிநேரமும் கிராமபகுதிகளுக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்கி வருகிறது.இந்நிலையில் அவ்வாறு தடையற்ற மின்சாரத்தை பெற்று வரும் கிராமப்புற மக்கள் தங்களுடைய அனைத்து பணிகளையும் எளிதாக நிறைவேற்றம் செய்துகொள்கின்றனர்.வீடு,மற்றும் விவசாயத்தேவைகளுக்கான மின்சாரதேவைகள் எவ்விதத்திலும் பாதிப்படைவதில்லை.இவ்வாறான சூழலில் இரவு நேரங்களில் கிராமங்களில் தெருவிளக்குகள் எரிவதற்கு அந்தந்த ஊராட்சியின் நிதியிலிருந்து மின்கட்டணம் செலுத்தப்படுகிறது.ஒரு கிராமத்தில் இரவு நேரத்தில் தெரு மின்விளக்கு எரிவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.தேவையற்ற நபர்கள் கிராமத்திற்குள் நுழைவதை எளிதில் கண்டுக்கொள்ளலாம்.விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் அறிந்து நம்மை விஷஜந்துக்கள் தீண்டுவதிலிருந்து காத்துக்கொள்ளலாம்.கால்நடைகள் பாதுகாப்பாக இருக்கும்.மொத்தத்தில் ஒரு கிராமத்தில் இரவு நேரத்தில் அனைத்து தெருவிளக்குகளும் எரிவதால் அந்த கிராமம் பாதுகாப்பான கிராமமாக இருக்கும்.கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டிருந்தால் குற்றவாளிகள் எளிதில் அடையாளம் காணமுடியும்.இவ்வாறு பலப்பல நன்மைகள் இரவில் தெருவிளக்குகள் எரிவதால் கிடைக்கின்றன.இப்படிப்பட்ட நிலையில் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சில ஊராட்சிகளில் ஊராட்சி மன்றத்தலைவர்கள் சிலர் கிராமத்தின் மின்சாரக்கட்டணத்தை சேமிக்கிறேன் பேர்வழி என்று இரவில் பத்து மணிக்கு மேல் அனைத்து எரியும் தெருவிளக்குகளை அனைத்து கிராமத்தை இருட்டாக்கி வருவதாக கிராமமக்கள் குற்றச்சாட்டினை முன்வைக்கிறார்கள்.இதனால் கிராமத்தின் மின்கட்டணம் குறைவது ஒருபுறம் இருந்தாலும் கிராமத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும்.பல்வேறு தீமைகள் நடைபெற வாய்ப்புண்டு எனவும், அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து இரவு நேரங்களில் கிராமத்தின் தெருவிளக்கை நிறுத்தி வைக்கும் ஊராட்சி மன்றத்தலைவர்களின்மேல் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி கிராமமக்கள் அதிகாரிகளுக்கு வேதனையோடு கோரிக்கை வைக்கின்றனர்.
Tuesday, June 9, 2020
சேத்தியாத்தோப்பு அருகே இரவு நேரங்களில் கிராமபகுதிகளில் மின்நிறுத்தம் செய்யும் ஊராட்சி மன்றத்தலைவர்களால் அதிர்ச்சி

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...