கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பூமணவெளி ஐய்யனார்கோவில் பகுதியிலிருந்து மேலமணக்குடி வரை புவனகிரி-குறிஞ்சிப்பாடி சாலைப்பகுதி செல்கிறது.இந்த சாலை முக்கியபோக்குவரத்து நிறைந்த சாலையாகும்.இந்த சாலையில் ஆபத்தான வளைவுகளும் உள்ளன.இச்சாலைகளில் வாகன ஓட்டிகள் கடக்கும்போது கவணத்துடன், பொறுமையாகவும் கடக்கவேண்டும் என அதிகாரிகளும், காவல்துறையினரும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
இந்நிலையில் இப்பகுதியில் சாலை குறுகலாகவும்,ஆபத்து நிறைந்ததாகவும் இருப்பதை மாற்றியமைக்கவேண்டும் எனஇப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து இப்பகுதியில்தமிழக அரசின் சிறப்பு நிதி 40 லட்சம் மதிப்பில் விரிவாக்ககப்பணிகள்
தொடக்கப்பட்டது.அதன்படி தேசிய ஊரக உள்கட்டமைபபு சாலை மேம்பாட்டுதிட்டத்தில் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப்பணிகளில் தற்போது சாலைகளின் விரிவாக்கத்திற்கு ஏற்ப அகலப்படுத்தும் பகுதியில் நீண்ட தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அமைக்கப்படும் தடுப்புக்கட்டைகள் தரமற்று இருப்பதாக இப்பகுதியில் உள்ள கிராமமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.அவர்கள் தெரிவிக்கும்போது சாலை பக்கவாட்டு தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டு அதற்கு பிறகு சாலை விரிவாக்கப்படவுள்ளன.இவ்வாறு பணிகள் நடைபெற்று வரும் தடுப்புக்கட்டைகள் தரமற்றும்,ஆழமில்லாமலும், தரம் குறைவான பொருட்களையும் பயன்படுத்தி போடப்படுவதால் எதிர்காலத்தில் இதன்மேல் அமையும் சாலை எளிதில் சேதமடையும்.விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும் என்று அவர்கள் அச்சத்துடன் தெரிவிக்கிறார்கள்.பாதுகாப்பு தடுப்புக்கட்டைகள் வலிமையாக இருந்தால்தான் இதன்மேல் விரிவாக்கம் செய்யப்படும் சாலையும் தரமாகவும் நீண்டகாலத்திற்கு பொதுமக்களுக்கு, மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பயனளிக்கும்படியாகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கிறார்கள்.இந்த சாலை விரிவாக்கப்பணியில் பக்கவாட்டு தடுப்புக்கட்டைகள் நான்கு அல்லது ஐந்தடி ஆழத்திற்கு பள்ளம் பறித்து அதனுள்ளிருந்து கம்பிகள் உதவியுடன் கான்கீரிட் பில்லர்கள் அமைத்து அதன்மீது பாதுகாப்பு தடுப்புக்கட்டைகள் எழுப்பி பின்பு சாலை விரிவாக்கம் செய்தால் சாலைகள் எளிதில் சேதமடையாது,தமிழக அரசின் முடிவுப்படி தரமான சாலைபோக்குவரத்து வசதி பொதுமக்களுக்கு கிடைக்கும் என்றும் இங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.எனவே தற்போது தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக கூறப்படும் சாலை விரிவாக்கப்பணியை உயரதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து தரமாக அமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.