உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, June 10, 2020

சொட்டு நீர் பாசனத்தில் குறைந்த செலவில் அதிக மகசூல் எடுக்கலாம் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு அழைப்பு


விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.விவசாயிகள் அனைவரும் முழுமையாக சொட்டுநீர் பாசனத்திற்கு மாறவும் அது விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறது.

சொட்டுநீர் பாசனம் அமைப்பதால் குறைந்த பொருளாதார செலவு,தண்ணீர் சேமிப்பு,குறைந்தளவு தண்ணீரைகொண்டு அனைத்து பயிர்களுக்கு முழுமையாக தண்ணீர் பாசனம் செய்யலாம்.வழக்கமான பாசனமுறைகளைவிட சொட்டுநீர் பாசனத்தில் பயிர்களின் வேர்களுக்கு தண்ணீர் நேரடியாக சென்றடைவதால் பயிர்கள் செழிப்பாக வளர்ந்து அதிகபட்ச மகசூல் தருகின்றன.

நம்மிடையே இருக்கும் தண்ணீரைக்கொண்டு எல்லா காலத்திலும் பயிர்செய்வது என்பது இயலாதக்காரியம்.இதுவே சொட்டு நீர் பாசனம் அமைத்தால் மூன்றுபோகமும் குறைவான தண்ணீர் அதிக விவசாயம் செய்யமுடியும்.சொட்டு நீர் பாசனமூலம் உரங்கள்,நுண்ணூட்டச்சத்துக்கள் தண்ணீரின் வழியாகவே கொடுக்கப்படுவதால் சிறிதளவு உரமிட்டாலும் ஒரே சீராக பயிர்களுக்கு கிடைக்கிறது.முக்கியமாக வறட்சியில் விவசாயிகளுக்கு ஆபத்தாந்தவனாக உதவக்கூடியது இந்த சொட்டுநீர் பாசனம்தான்.இப்படி எண்ணற்ற நன்மைகள் சொட்டுநீர் பாசனத்தில் இருக்கிறது.

இதனைப்பற்றி அறிந்த விவசாயிகள் இதை தவிர்ப்பதில்லை.போதிய அளவு விழிப்புணர்வு இல்லாமல்தான் விவசாயிகள் பலர் சொட்டுநீர் பாசனம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்கள்.தற்போதையக்காலக்கட்டத்திலும், இனிவரும் காலக்கட்டத்திலும் குடிப்பதற்கு,விவசாயத்திற்கும் எந்தளவு தண்ணீர்த்தேவை அதிகரிக்கும்.அவ்வாறு அதிகரிக்கும் தண்ணீர்த்தேயை ஈடுகட்டுவது சிரமம்.அதற்காகத்தான் தமிழக அரசு அனைத்து விவசாயிகளும் சொட்டுநீர் பாசனத்திற்கு மாறுவதற்கு அறிவுறுத்தி வருகிறது. இப்போதும் விவரமறிந்த விவசாயிகள் தமிழக அரசு அறிவுறுத்தல் மற்றும் அரசு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வழிக்காட்டல் போன்றவற்றின்மூலம் தற்போது சொட்டுநீர் பாசனத்திற்கு மாறி வருகிறார்கள்.

அதன்படி கடலூர் மாவட்டம் புவனகிரி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு மானியத்துடன் சொட்டுநீர் பாசனம் அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க தோட்டக்கலைத்துறை மூலம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.இதனை புவனகிரி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் வித்யா விவசாயிகளிடம் நேரடியாக சென்று அறிவுறுத்தி வருகிறார்.இது குறித்து அவர் தெரிவிக்கும்போது பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டமான சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன உபகரணங்கள் அரசு நிர்ணயித்துள்ள தொகையிலிருந்து சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதம் மானியமும்,பெரு விவசாயிகளுக்கு 75 சதம் மானியமும் வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் மூலம் மானியம் வழங்கப்படுகிறது.இதில் டீசல், மற்றும் மின்மோட்டார்களை வாங்க அதிக பட்சமாக 15,000-,குழாய்களை அமைக்க ரூ.10,000-,தரை மட்டத்தில் தண்ணீர்தேக்கி வைக்கும் தொட்டி கட்டுவதற்கு ரூ.40,000 மற்றும் குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு  அமைக்க செலவிடும் தொகையில் 50 சதம்வீதம் அல்லது ரூ.25,000மிகாமலும் இருக்கவேண்டும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் கணினி சிட்டா,அடங்கல்,சிறு,குறு விசாய  சான்று அல்லது கிசான் நிதியுதவி பெற்ற சான்று, ஆதார் அட்டை நகல்,குடும்ப அட்டை நகல், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், உள்ளிட்ட சான்றுகளை விண்ணப்பத்துடன் இணைத்து புவனகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளித்து முன்பதிவு செய்துகொள்ளுமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் விவரங்களுக்கு புவனகிரி வட்டார தோட்டக்லைத்துறை உதவி இயக்குநர் -9384067912 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும் அவர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

விவசாயிகள் இனியும் தாமதிக்காமல் சொட்நீர் பாசனம் அமைத்து குறைந்த செலவில் அதிக மகசூல் பெறவேண்டும்.தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்.