உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, June 11, 2020

சேத்தியாத்தோப்பு அருகே கிராம பகுதியில் அதிகளவில் தென்படும் மயில்களை பாதுகாக்க கோரிக்கை





கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே எறும்பூர்,ஒரத்தூர்,அழிச்சிக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் மயில்கள் அதிகளவில் இருந்து வருகின்றன.மலை பிரதேசங்கள், மரங்கள் அடர்ந்த பகுதி,குளிர்ச்சியான சூழல் கொண்ட இடங்களில் மயில்கள் அதிகளவில் வசிக்கும்.இந்நிலையில் கடலூர் மாவட்டத்தின் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பலபகுதிகளில் மயில்கள் வசிப்பதற்கு ஏற்ற சூழல் இருந்து வருவதால் முன் எப்போதும் இல்லாத அளவில் மயில்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.மரங்கள் அடர்ந்த பகுதி,கரும்பு,நெல்,வயல்கள், தோட்டங்கள் என பலவற்றிலும்  மயில்கள் இருப்பதால் இதனை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்தியாவின் தேசிய பறவையாக மயில் 1963 ஆம்ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மயில்கள் 2500 மீட்டர் உயரத்தில் இருக்ககூடியவை ஆகும்.இவ்வாறு சிறப்புமிக்க மயில்கள்
அதிகாலை, மற்றும் மாலை வெய்யல் மறையும் நேரத்திலும் தங்களது இருப்பிடத்தைவிட்டு வெளியில் வந்து இரைகளை தேடுகின்றன.இதனை அப்பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசிக்கின்றனர்.ஆயிரத்திற்கும் அதிகமான மயில்கள் இங்கு இருப்பதால் மயில்களை சமூக விரோதிகளிடமிருந்து காக்கவேண்டும்.அனைத்து மயில்களையும் பாதுகாக்கும்பொறுட்டு இப்பகுதியில் மயில்களுக்கான சரணாலயம் அமைக்கவும் வேண்டும் என பலரும் தமிழக  அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.