கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் தமிழக அரசு கால்நடைத்துறை சார்பில் ஊரக புறக்கடை கோழிவளர்ப்பு திட்டத்தின் கீழ் 273 பெண்களுக்கு விலையில்லா கோழிக்குஞ்சு வழங்கப்பட்டது.இதில் சிதம்பரம் கோட்ட கால்நடைத்துறை உதவி இயக்குநர் மோகன் பங்கேற்று பயனாளிகளுக்கு ஒரு பயனாளிக்கு 25 கோழிக்குஞ்சுகள், மற்றும் நடைமுறை செலவினத்தொகையாக ரூபாய் நூற்றியம்பதும் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு கால்நடை உதவி மருத்துவர் உமாமகேஸ்வரி,கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஐய்யன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் தமிழக அரசின் சிறப்புமிக்க இந்த திட்டத்தை தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சில நாட்களுக்கு முன்பு கடலூரில் துவக்கி வைத்தார்.அதன் தொடர்ச்சியாக தற்போது வழங்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.சிதம்பரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 3063 பயனாளிகளுக்கு 76,575 கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.