கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தம்பிக்குநல்லாண்பட்டினம் கிராமம் உள்ளது. இக்கிராமபொதுமக்களின் 100 ஆண்டுகளின் கனவு விவசாயிகள் இரக்க குணத்தால் நிறைவேறியது. புவனகிரி அருகே உளள் தம்பிக்குநல்லாண்பட்டினம் கிராமம் புவனகிரி பேரூராட்சி, ஆதிவராகநல்லூர் மற்றும் ஆயிபுரம் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை கொண்ட இந்த கிராமத்தில் சுடுகாட்டுப் பாதை இல்லாமல், கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். யாரேனும் இறந்தால் தனியார் வயல் மற்றும் ஆற்றில் இறங்கி பிணத்தை சுமந்து செல்வது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் இதே கிராமத்தை சேர்ந்த இரக்க குணம் கொண்ட விவசாயிகள் 25 பேர் தாமாக இடம் தர முன் வந்தனர். சுமார் 50 லட்சம் ரூபாய் மதிக்க தக்க விவசாய நிலத்தை சுடுகாட்டு சாலை அமைக்க அவர்கள் ஆதிரவாகநல்லூர் ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அதன் பின் ஊராட்சித் தலைவர் ஜோதிநாகலிங்கம், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அரை கி.மீ., தொலைவிற்கு 15 மீட்டர் அகலம், அரை மீட்டர் உயரத்தில் சாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ளார். கிராமமக்களின் ஒற்றுமையை நிருபித்து வரும் இந்த நிகழ்வை கேள்விபட்ட பலரும் மனம் திறந்து பாராட்டி வருகிறார்கள்.
Sunday, June 14, 2020
100 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் அமைத்த சுடுகாட்டு பாதை பலரும் பாராட்டு

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...