கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் காட்டுநாயக்கன் தெரு உள்ளது.இந்த தெரு செல்லும் முகப்பு பகுதியில் ஏராளமான குடியிருப்புக்கள் இருந்து வருகின்றன.இந்நிலையில் இந்த தெருவில் செல்லும் சாலையில் நீண்டநாட்களாக கழிவு நீர் வழிந்தோடி வருகிறது.இவ்வாறு வழியும் கழிவுநீரானது குடியிருப்புகளுக்கு மத்தியில் குளமாக தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.இதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால் குடியிருப்புகளில் உள்ளவர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டனர்.துர்நாற்றமும் அதிகளவில் வீசிவருவதால் உணவருந்த முடியாமலும் தவித்து வருகிறார்கள்.இங்குள்ள குழந்தைகள்,முதியவர்கள் நிலையோ மிக பரிதாபமாக உள்ளது.இதுகுறித்து இப்பகுதி மக்கள் தெரிவிக்கும்போது பல இடங்களிலிருந்து கழிவு நீர் வடிகாலாக திறந்தவெளியில் சாலையிலே வழிந்தோடி இங்கு தேங்குகிறது.இவ்வாறு தேங்கும் கழிவுநீர் வடிய வழியில்லாததால் நாங்கள் பலவாறு தொல்லை அனுபவித்து வருகிறோம்.பல தொற்று நோய்களும் ஏற்பட்டு வருகின்றன.இப்பகுதியில் தேங்கி வரும் கழிவுநீரை அருகில் உள்ள வெள்ளாற்றில் வடிகாலாக மாற்றி விடுங்கள் என சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம்.அவர்கள் சரி செய்கிறோம் என்று கூறுவதோடு எங்களது முயற்சி நின்று விடுகிறது.தமிழக அரசு தற்போது சிறப்பு நிதியின் அடிப்படையில் கிராமம், மற்றும் நகர்ப்புறங்களுக்கு சாக்கடை வடிகால் வசதியை செய்து தந்து வருகிறது.. அது மிகுந்த பயனளிக்கும்படியாகவும் உள்ளது.ஆனால் அதுபோன்ற வசதியை அரசு கொடுத்தும் அதிகாரிகள் எங்களுக்கு செய்து தரமறுத்து வருகிறார்கள். சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் வரும் இப்பகுதியில் சாக்கடை நீர் குட்டையாக தேங்காமல் அருகிலுள்ள ஆற்றில் வடியவைக்கும்படியான அமைப்பை ஏற்படுத்தி, இங்குள்ள குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையை அதிகாரிகள் விரைந்து நிறைவேற்றி தரவேண்டும் என நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என அவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
Saturday, June 13, 2020
சேத்தியாத்தோப்பு காட்டுநாயக்கன் தெருவில் கழிவு நீர் குளமாக தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...