உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, June 26, 2020

சேதமடைந்த கண்ணங்குடி நடை பாலத்தை புதியதாக அமைத்து தர கோரிக்கை




கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் அருகே உள்ளது கண்ணங்குடி கிராமம்.இக்கிராமத்தில் செல்லும் பாசிமுத்தான் வாய்க்காலில் நடை பாலம் ஒன்று உள்ளது.இப்பாலம் கடந்த ஐம்பத்தியந்து ஆண்டுகளுக்கு முன்பு கீரப்பாளையம் ஊராட்சிய ஒன்றியத்தின் மூலம் கட்டப்பட்டது.கண்ணங்குடி கிராம மக்கள் பாசிமுத்தான் வாய்க்கால் மறுபக்கம் உள்ள வயல்வெளிக்கு செல்வதற்காக ஏற்படுத்தப்படுத்தப்பட்டது.வயல்களில் நடவுப்பணிகள் மேற்கொள்ளவும்,விளையும் பொருட்களை வீடுகளுக்கு கொண்டுவருவதற்காகவும் உருவாக்கப்பட்டது பாலம்.அன்றய காலத்தில் மிக எளிமையாக அமைக்கப்பட்ட பாலம்.கிராமமக்களுக்கு பெரிதும் பயன்தந்து வந்தது.பாசிமுத்தான் வாய்க்காலில்  தண்ணீர் செல்லும்போது அதில் இறங்கி செல்லாமல், பாலத்தின் வழியாக வயல்வெளிக்கு செல்வதற்கு மக்கள் இதனை பயன்படுத்தி வந்தனர்.இவ்வாறான நிலையில் காலப்போக்கில் இப்பாலம் போதிய பராமரிப்பு இல்லாமல் போனதால் தன்னுடைய வலுவினை இழக்க ஆரம்பித்தது.அதனோடு வாய்க்காலில் செல்லும் தண்ணீராலும் பாலத்தினை தாங்கி நிற்கும் பில்லர்கள் சேதமடைந்தன.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாசிமுத்தான் வாய்க்காலில் சென்ற அதிக வெள்ளத்தினால் பாலத்தின் மேல் இருந்த நடைபாதை அமைப்பு வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டது.இதனால் வேதனையுற்ற கண்ணங்குடி கிராமமக்கள் வாய்க்காலை கடக்க சிரமப்பட்டனர்.வாய்க்கால் மறுபக்கம் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்களில் பணிகளை துவக்கவதில் காலதாமதம் ஏற்பட்டது.கண்ணங்குடி கிராமத்திலிருந்து பாலத்தை கடந்து சென்று வந்த மக்கள் பாலம் சேதம் அடைந்ததினால் கண்ணங்குடி கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் கடந்து தங்களது வயலுக்கு செல்ல நேர்ந்தது.நீண்ட தூரம் சுற்றி செல்லும் நிலையால் பொருளாதார இழப்பு, தேவையற்ற காலவிரயம் என ஏற்பட்ட்து.இப்படிப்பட்ட சூழலில் கண்ணங்குடி கிராமமக்களும்,விவசாயிகளும் அந்தரத்தில் தொங்குவது போல் ஆபத்தான நிலையில் பாலத்தினை இப்போது கடக்க முயற்சிக்கிறார்கள்.எந்த நேரத்தில் என்னாகும், ஏதாவது விபரீதம் ஏற்படுமோ எனும் அச்சத்தில் இவர்கள் பாலத்தினை கடக்கமுயன்றாலும் அவர்களால் மறுபக்கம் செல்லமுடியவில்லை.அதனால் வேளாண்பணிகள் பாதிப்படைகின்றன.இதனையடுத்து நீண்ட காலமாக இப்பாலத்தை அகற்றிவிட்டு புதிய தரமான பாலம் அமைத்து தரவேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.ஆனாலும் இன்னமும் பாலம் அமைக்கப்படவில்லை.அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியை ஆய்வு செய்து தரமான பாலம் அமைத்து தரவேண்டும் என அவர்கள் அதிகாரிகளுக்கு  கோரிக்கை வைத்து வருகிறார்கள்.விரைவில் புதிய பாலம் அமைத்து தரவேண்டும் என்பதே கண்ணங்குடி கிராமமக்கள், விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.