கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வடதலைக்குளம்
கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் பார்த்திபன்.இவர் புவனகிரி ராகவேந்திரர் கோவில் அருகில் உள்ள பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றார். அப்போது இவருக்கு முன்னால் ஏடிஎம்மில் பணம் எடுத்தவர் மிஷினில் 2 ஆயிரத்தை விட்டுசென்றிருப்பதை பார்த்தார்.உடனடியாக அப்பணத்தை எடுத்த ஆசிரியர் பார்த்திபன் அதனை புவனகிரி போலீஸ்நிலையத்தில் அப்போது பணியில் இருந்த ஏட்டு முருகேசனிடம் ஒப்படைத்தார்.இந்நிலையில் ஆசிரியரின் நேர்மையான செயலைக்கண்ட இன்ஸ்பெக்டர் ராபின்சன்,சப்இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் என பலரும் ஆசிரியர் பார்த்திபனை பாராட்டி வருகிறார்கள்.