கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்டபட்ட கந்தகுமாரன் ஊராட்சி உள்ளது.இந்த ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஏற்கெனவே கொரானோ நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான அனைத்து பகுதிக்கும் கிருமிநாசினி மருந்துகள் தெளித்தல்,முகககவசம்,கபசுர குடிநீர்,தூய்மை பணியாளர்களுக்கு கையுறை,கவச உடைகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.இந்நிலையில் கிராமக்கள் மற்றும் ஊராட்சியின் தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் கொரானோ நோய்த்தடுப்பு மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி கந்தகுமாரன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் தமிழ்ச்செல்விகுமரகுரு தலைமை வகித்தார்.துணைத்தலைவர் மிஸ்பாஹூசா,சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலைத்துணைத்தலைவர் விநாயகமூர்த்தி, கிராமநிர்வாக அலுவலர் மணிக்கண்டன் முன்னிலை வகித்தனர்.ஹோமியோபதி மருத்துவர்கள் டாக்டர்பரணிதரன்,கிருத்திகா கொரானோ நோய்த்தடுப்பு மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30 பற்றி அதன் நன்மைகளை எடுத்துரைத்தனர்.பின்னர் கீரப்பாளையம் ஒன்றிய சேர்மன் கனிமொழிதேவதாஸ் படையாண்டவர்,துணை சேர்மன் காஷ்மீர்செல்வி விநாயகமூர்த்தி, ஆகியோர் பங்கேற்று கிராமமக்கள், மற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு கொரானோ நோய்த்தடுப்பு மாத்திரை ஆர்சனிகம் ஆல்பம் 30 ஐ வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் விமலா,விஜி, பாக்கியராஜ்,ரேணுகா,அப்துல்லத்தீப்,ஆவின் ராதாகிருஷ்ணன்,மணியரசன்,அரிபுத்திரன்,சுந்தர்,வடிவேல் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.நிறைவாக ஊராட்சி செயலர் அனைவருக்கும் நன்றிதெரிவித்தார்.முன்னதாக கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன்,துணைசேர்மன் ஆகியோர் அலுவலக பணியாளர்களுக்கு கொரானோ நோய்த்தடுப்பு மாத்திரைகளை வழங்கினர்.
Sunday, June 7, 2020
கந்தகுமாரன் ஊராட்சியில் கொரானோ நோய்த்தடுப்பு மாத்திரைகள் வழங்கல்

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...