உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, June 7, 2020

வாழைகொல்லை கிராமத்தில் துணைசுகாதார நிலையம் மீண்டும் செயல்படுமா?



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வாழைக்கொல்லை கிராமம்.இக்கிராமத்தில் பேருந்து நிறுத்தத்தின் அருகில் துணைசுகாதார நிலையம் உள்ளது.இந்த துணை சுகாதாரநிலையத்தினால் இப்பகுதியில் வாழைக்கொல்லை,கூளாப்பாடி,தென்பாதி,வடக்குவிருதாங்கன், தெற்குவிருதாங்கன்,கலியமலை,வெய்யலூர்,வடப்பாக்கம்,ஓடாக்கநல்லூர்,வாக்கூர் உள்ள பத்துக்குமேற்பட்ட கிராமமக்கள் பயன்பெற்று வந்தனர்.கிராமக்களின் சுகாதாரநலனை முன்னிட்டு தமிழக அரசு கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த துணை சுகாதாரநிலையத்தை ஏற்படுத்தி இதன்மூலம் சிறப்பான மருத்துவ சேவையை கிராமமக்களுக்கு வழங்கி வந்தது.இங்கு பல்வேறு உடல்நலக்கோளாறுகளுக்கு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை, ஆலோசனை, மருந்துகள் வழங்கப்பட்டன.இந்நிலையில் என்னகாரணம் என்று தெரியாமல் இந்த துணைசுகாதார நிலையம் திடிரென்று செயல்படாமல் முடங்கியது.இதனால் இதனை நம்பியிருந்த கிராமமக்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர்.மேலும் தங்களுக்கான பல்வேறு உடல்நலக்கோளாறுகளுக்கு நீண்டதூரம் உள்ள நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.சிலநேரங்களில் நீண்டதூரம் நகரங்களுக்கு  செல்வதில் தேவையற்ற சிரமமும், காலவிரயமும் ஏற்பட்டது.இதனால் மீண்டும் வாழைக்கொல்லை துணைசுகதாரநிலையம் மீண்டும் செயல்படவேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.அவ்வாறு துணை சுகாதாரநிலையம் செயல்படுவதற்கு தற்போதுள்ள பாழடைந்த நிலையில் உள்ள துணைசுகாதாரநிலைய கட்டித்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் அமைத்து தரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.