கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பில் கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆவின் தலைவர் பச்சமுத்து தலைமை வகித்தார்.ஆவின் துணைத்தலைவர் செந்தில்குமார்,ஆவின்பொதுமேலாளர் வெங்கடாசலம்,ஆவின் பதிவாளர் நாகராஜ்சிவக்குமார்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கடலூர் மாவட்ட பால்வள கூட்டுறவு சங்க பதிவாளர் ஆரோக்கியதாஸ் அனைவரையும் வரவேற்றார்.
ஆவின் உயரதிகாரிகள்,ஒன்றியத்தின் நிர்வாககுழு உறுப்பினர்கள் என இதில் பங்கேற்றனர்.கூட்டத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட கடலூர் பால்வள ஒன்றியத்தை முன்னேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.இதில் அனைத்து நிர்வாக குழு உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.விழுப்புர மாவட்ட பால்வள ஒன்றியத்தில் இதுவரை இருந்துவந்த கடலூர் மாவட்டத்தை தனியாக பிரித்து கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் என்று தனியாக பிரித்து இம்மாவட்டத்தின் பால்உற்பத்தியாளர்களுக்கு வாழ்வாதாரத்தை முன்னேற்றியதற்கும்,தற்போது தமிழகத்தில் கொரானோ நோய்த்தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமிக்கு நன்றியும், பாராட்டுக்கள் தெரிவித்தும், இந்த புதிய பால்வள ஒன்றியத்திற்கு, புதிய நிர்வாக குழு கட்டிடம் கட்டுவதற்கு ஏற்கெனவே சட்டசபையில் 110 விதியின்கீழ் 2 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டதற்கும் நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் பெருமாள்ராஜா,செல்வராஜ்,குமார்,முனுசாமி, ஞானசேகரன்,செல்லதுரை,கணேசன்,ராஜேந்திரன்,சந்திரா, வந்நலா,பூங்கொடி,சசிகலா,மலர்க்கொடி,சந்திரபாபு,வேல்முருகன் உள்ளிட்ட அனைத்து நிர்வாககுழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.முடிவில் ஆவின் பொதுமேலாளர் வெங்கடாச்சலம் அனைவருக்கும் நன்றி கூறினார்.