கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் கடலூர் மேற்குமாவட்ட பாஜக கட்சி அலுவலகத்தில் மாற்றுக்கட்சியிலிருந்து பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கேபிடி இளஞ்செழியன் முன்னிலையில் கடலூர் மாவட்ட மகளிரணி தலைவி சுனந்தாசெல்வகுமார் தலைமையில் 300க்குமேற்பட்டவர்கள் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் இணைந்தவர்களை மேற்குமாவட்ட தலைவர் கேபிடி இளஞ்செழியன், மாவட்ட மகளிரணி தலைவி சுனந்தாசெல்வகுமார், மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.பாஜகவில் இணைந்தவர்களுக்கு மேற்குமாவட்ட தலைவர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.பாரத பிரதமரின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்வோம், கடலூர் மேற்குமாவட்டத்தை பாஜகவின் கோட்டையாக மாற்றிடுவோம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கல்வியாளர் பிரிவு தலைவர் நாகேஸ்வரன்பாபு,மூத்த காரியகர்த்தா பாலசுப்ரமணியன் ஆடிட்டர், எஸ்சி அணி மாவட்ட தலைவர் பிரபுகணேஷ்,மாவட்ட துணைதலைவர் பிரபாகரன், பரங்கிப்பேட்டை ஒன்றிய அமைப்பாளர் கண்ணன்,மாவட்ட இளஞரணி உசூப்பூர்வேலு,சிதம்பரம் சிவனேசன்,ஜேகே படடிணம் கிருஷ்ணராஜ்,முன்னாள் நகர பொதுச்செயலாளர் சின்னிகிருஷ்ணன், சேத்தியாத்தோப்பு ராஜா,முருகன்,மாவட்ட சிறுபான்மை அணி அப்துல்ரகுமான், உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.