உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, June 22, 2020

வடிவம் இழக்கிறதா வாலாஜா ஏரி?




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர்,கரைமேடு பகுதியில் அமைந்துள்ளது வாலாஜா ஏரி.சுமார் பனிரெண்டாயிரம் ஏக்கர் பரப்பபளவும், 12 அடி தண்ணீர் தேக்கும்படியாகவும் இந்த ஏரி உருவாக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.இந்த ஏரிக்கு வீராணம் ஏரியின் தண்ணீர் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு மூலம் தேக்கப்பட்டு,வடக்குராஜன் வாயக்கால் மூலம் தண்ணீர்கொண்டு செல்லப்படுகிறது.மேலும் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் நிலக்கரி வெட்டிஎடுக்கும்போது வெளியேற்றப்படும் உபரிநீரும் இதில்தேக்கப்படுகிறது.இந்த ஏரியினை நம்பி கீழ்வளையமாதேவி,மதுவானைமேடு,நெல்லிக்கொல்லை, பின்னலூர்,கரைமேடு,அம்பாள்புரம்,தலைக்குளம்,மருதூர்,கொளக்குடி உள்ளிட்ட முப்பதுக்குமேற்பட்ட கிராமத்தின் இருபதாயிரம் ஏக்கர்விவசாய விளைநிலங்களுக்கு பாசனவசதியை தந்து வருகிறது.சம்பா,நவரை,குறுவை உள்ளிட்ட அனைத்து நெல்சாகுபடிக்கும் வற்றாமல் தண்ணீர் வழங்கிவரும் இந்த ஏரியினால் இப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டும் வருகிறது.இவ்வாறான நிலையில் தற்போது இந்த ஏரி தன்னுடைய வடிவத்தை இழந்து வருவதாக இப்பகுதி விவசாயிகள் வேதனையோடு தெரிவித்து வருகிறார்கள்.இந்தாண்டு தமிழக அரசின் சிறப்பு குடிமராமத்து திட்டத்தின்மூலம் தமிழக அரசு 58 கோடிரூபாய் நிதி ஒதுக்கி ஏரியை தூர்வாரி பாதுகாக்க திட்டம்தீட்டப்பட்டுள்ளதாக பெருமாள் ஏரி பாசன சங்க செயலாளர் சண்முகம் தெரிவிக்கிறார்.வாலாஜா ஏரிக்கு வீராணம் ஏரியின் தண்ணீரும், நெய்வேலி என்எல்சி உபரிநீரும் தேக்கிவைக்கப்படும் நிலையில் அதிகளவில் வரும் நீரை பரவனாறு மூலமாக பெருமாள்ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு தேக்கப்படுகிறது.மாவட்டத்தின் சிறப்பான ஏரிகளில் ஒன்றாக விளங்கும் வாலாஜா ஏரியின் தற்போதைய நிலை பார்க்கவே வேதனை தருகிறது.ஏரியின் நீர்ப்பிடிப்புத்திறன் குறைந்துபோய் ஏரியில் ஆங்காங்கே மண்திடடுக்கள்,கோரைகள் உள்ளிட்டவை வளர்ந்துவிட்டன.இதுபோல் ஏரியின் பரப்பளவில் பெரும்பகுதி சுருங்கிப்போய்விட்டதென்றும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.நீர்நிலைகள் மக்களின் வாழ்வாதாரம்.அதிகாரிகள் விரைவாக வாலாஜா ஏரியை தூர்வாரி,அதனை தொடர்நது பராமரித்து வரவேண்டும்.சிறந்த சுற்றுலாத்தளமாக்குவதற்கு ஏரியின் கரைகளை சீரமைத்து தரமான சாலை அமைக்கவேண்டும்.தற்போது ஏரியில் வைக்கப்பட்டுள்ள பல்வகை மரங்கள் போதிய பராமரிப்பு இல்லாதநிலையில் உள்ளன.அவற்றை பராமரித்து வாலாஜா ஏரியினை சுற்றுலாத்தளமாக்கவும்வேண்டும்.விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க உடனடியாக தூர்வாரவும் வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.