உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, June 15, 2020

புவனகிரி பேரூராட்சியில் ஆமைவேகத்தில் கொரானோ நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை பணிகள்





தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் கொரானோநோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைப்பணிகள்  போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.அனைத்து மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள் தடையில்லாமல் கிடைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தும் வருகிறது.இவ்வாறான சூழலில் கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் செய்யப்படுவதாக கூறப்பட்டாலும், அவை போதுமானதாக இல்லை.பதினைந்துக்கும் மேற்பட்ட வார்டுகளில் போதிய அளவில் பொதுமக்களிடம் கொரானோ நோய்த்தொற்றுவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை.ஆனால் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என புவனகிரி பேரூராட்சி நிர்வாகத்தால் அடிக்கடி சொல்லப்படுகிறது.அதற்கு ஒரே உதாரணம் நகரில் ஏராளமான அரசு அலுவலகங்கள் இருக்கின்றன.இந்த அலுவலகங்களுக்கு தினசரி ஏராளமான பொதுமக்களும் வந்து செல்கிறார்கள்.அதிகம் பொதுமக்கள் வந்து செல்வதால் கொரானோ நோய்த்தொற்று ஏற்படக்கூடும் என முன்னெச்சரிக்கையாக கிருமிநாசினி தெளிக்கவேண்டும்.ஆனால் ஒருசில அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுவதாக புகைப்படம் மட்டும் எடுக்கப்படுகிறது.அதற்கடுத்து மற்ற அரசு அலுவலகங்கள் கண்டுக்கொள்ளப்படுவதில்லை.தடையற்ற சேவை செய்வதற்கு தமிழக அரசும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் புவனகிரி பேரூராட்சிக்கு பல வசதிகள் செய்துகொடுத்திருக்கும்போது அதனை செயல்படுத்துவதில் சுறுசுறுப்பில்லாமல் பேரூராட்சி நிர்வாகம் இருக்கிறது.ஊரடங்கு தளர்வில் பல்வேறு விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் புவனகிரியில் அதிகரித்து காணப்படுகிறது.பொதுமக்கள் அரசு வலியுறுத்தும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது இல்லை.முககவசமும் அணியாமல் நகரில் வலம் வருகிறார்கள்.இதற்கு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இப்படியே சென்றால் அடுத்து என்னாகும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.புவனகிரி பேரூராட்சி நிர்வாகத்தினர் அரசு வலியுறுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும்  போர்க்கால அடிப்படையில் செய்யவேண்டும். நகரில் புதிய பாலம், பேருந்துநிலையம், பேருந்து நிழற்குடை உள்ளிட்ட பலபகுதிகள் மக்கள் கூடும் இடம் என்பதால் இலவசமாக முகவசம் வழங்குதல்,சானிடைசர் வழங்குதல், கைகழுவ சோப்,பு தண்ணீர் ஆகிய வசதிகள் ஏற்படுத்துதல் வேண்டும் என்பதே அனைவரின்கோரிக்கையாக இருக்கிறது.புவனகிரி பேரூராட்சி நிர்வாகம் வேகமாக பணிகளை செயல்படுத்துமா?