உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, June 15, 2020

கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் விதமாக புதிய கிரிக்கெட் அகாடமி திறப்பு




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பூதங்குடி கிராமம்.இக்கிராமத்தில் உள்ள மற்றும் இதனைச்சுற்றியுள்ள நூற்றுக்குமேற்பட்ட கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும்விதமாக அமமுக சார்பில் புதிய கிரிக்கெட் அகாடமி திறக்கப்பட்டது.அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எம்எல்ஏவின் ஆணைக்கிணங்க, அமமுக கழக அமைப்புச்செயலாளரும் ,கடலூர் மேற்குமாவட்ட செயலாளருமான கேஎஸ்கே பாலமுருகன் ஆலோசனைப்படியும் இந்த புதிய கிரிக்கெட் அகாடமி திறக்கப்பட்டது.இதனை கடலூர் மாவட்ட அமமுக இளைஞர் பாசறை செயலாளர் ராஜா தலைமையில் இப்புற ஏழை,எளியமாணவர்களின் விளையாட்டு கனவை நினைவாக்கும்விதமாகவும்,கொரானோ நோய்த்தொற்று காலத்தில் தங்களின் நேரத்தை பயனுள்ளவிதத்திலும் இருக்கும்படியாகவும் இந்த கிரிக்கெட் அகாடமி திறக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் 100 இளைஞர்களுக்கு சீருடை, மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.இதில் கீரப்பாளையம் ஒன்றிய கழக செயலாளர் முல்லைக்கோவன்,மாவட்ட அம்மாபேரவை தலைவர் நெடுஞ்செழியன்,மற்றும் மகேந்திரன்,இராஜபாரதி,பாலமுரளி,சசி,பாரி,உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.இந்த புதிய கிரிக்கெட் அகாடமியால் நீண்டகாலமாக இருந்து வரும் கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத்துறைக்கா ஆர்வம்முழுமையாக நிவர்த்திசெய்யப்படும்.கிராமப்பு மாணவர்களும் விளையாட்டுத்துறைகளில் சாதிக்க தனிகவன பயிற்சிகள் வழங்கப்படும் என இந்நிகழ்ச்சியின் தலைமைவகித்து பேசிய மாவட்ட அமமுக இளைஞர் பாசறை செயலாளர் ராஜா தெரிவித்தார்.