உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, June 28, 2020

சேத்தியாத்தோப்பு அருகே பொன்னங்கோவில் கிராமமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் கீரப்பாளையம் ஒன்றியத்தில் பொன்னங்கோயில் கிராமத்திலிருந்து ஊர்ப்பொதுமக்கள் சார்பாக ஒரு வேண்டுகோள். நாங்கள் எங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக மகளீர் சுய உதவிக்குழு மூலமாக பணம் பெற்றுள்ளோம். தினசரி கூலிவேலைகள் இருக்கும் போது, வாரமோ அல்லது மாதாந்திர தவனைகளை தவராமல் கட்டி வந்தோம். ஆனால் தற்போது கொரோனா என்னும் கொடிய நோயினால்  ஒட்டுமொத்த உலகே பாதிக்கப்பட்ட நிலையில் ஊரடங்கு மற்றும் வேலையிண்மை காரணமாக எங்களால் பணம் கட்ட முடிய வில்லை. எங்களுக்கு உதவும் விதத்தில் தமிழக அரசும் எவ்விதமான கடன் தவனை பணமும் தற்போது கட்ட வேண்டாம் என ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் இதனை  காற்றில் பறக்கவிட்ட தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வீடு தேடிவந்து, வீட்டிலிருப்பவர்களை மரியாதைக்குறைவாக பேசி, மன உளைச்சலை ஏற்படித்தி, அடம்பிடித்து கட்டாயம் பணம் கட்ட வேண்டும் என துன்புறுத்துகிறார்கள், மிரட்டுகிறார்கள்.மாண்புமிகு தமிழக முதல்வர் அய்யா அவர்கள் தயவு கூர்ந்து, இதுபோன்று தொல்லைகொடுத்து வரும் நிதி நிறுவனங்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடன் தவனை கட்ட காலஅவகாசமும் அளிக்கவேண்டும் என பணிவண்புடன் கேட்டுக்கொள்கிறோம் என தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.