கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீழ்புவனகிரியில் தனியார் மரவாடிக்கு அருகில் சாலையோரத்தில் அதிக மின்னழுத்தம் கொண்ட மின்கம்பிகளை தாங்கி நிற்கும் மின்கம்பம் ஒன்று உள்ளது.இந்த மின்கம்பம் பதித்து நீண்டநாட்களாகிவிட்டதால் தற்போது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.அதற்கு காரணம் புவனகிரி-கடலூர் சாலையின் முக்கியமான இடத்தில் சாலை ஓரம் உள்ளதால் இதனைக்கடக்கும் அனைவருமே அச்சத்துடனே கடந்து செல்கிறார்கள்.மின்கம்பம் தற்போது துறுப்பிடித்து சிமெண்ட்காரைகள் பெயர்ந்து, அதிலுள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன.அதிக மின்னழுத்தம் கொண்ட மின்கம்பிகளை தாங்கிக்கொண்டுள்ளதால் லேசான காற்று அடித்தால்கூட மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும்முறிந்துவிழும் நிலையில் இருக்கிறது.மின்கம்பத்தின் நிலையினை நீங்கள் இதிலுள்ள படத்தினைப்பார்த்து தெரிந்துகொள்ளலாம்.மேலும் இப்பகுதி சாலையானது அதிக போக்குவரத்து நிறைந்த சாலை.அருகில் பள்ளி,குடியிருப்புக்களும உள்ளன.இருசக்கர,நான்கு சக்கர வாகனங்கள் தினமும் நிமிடத்திற்கு நூற்றுக்கணக்கில் இவ்வழியாக கடந்து செல்கின்றன.இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் மின்வாரிய அதிகாரிகளிடம் இதனை மாற்றிடவேண்டும் என கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருவதாக அவர்கள் வேதனையோடு தெரிவிக்கிறார்கள்.மின்வாரிய அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை ஆய்வு செய்மு உடனடியாக புதிய தரமான மின்கம்பம் அமைத்து இப்பகுதியில் மின்கம்பத்தினால் நிலவி வரும் அச்சத்தை போக்கவேண்டும்என அவர்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Saturday, June 27, 2020
பழுதான மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...