கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது சின்னநெற்குணம் கிராமம்.இக்கிராமத்தில் உள்ள விவசாயி குணசேகரன் என்பவரது வயல்களில் நெல்பயிரில் பச்சை பாசி படர்ந்து பயிர் வளர்ச்சியை பாதிப்படைய செய்வதாக விவசாயிகள் அரசு வேளாண்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து கடலூர் மாவட்ட தரக்கட்டுப்பாட்டு அதிகாரி பார்த்தசாரதி, புவனகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுதாமதி, விருத்தாசலம் வேளாண்மை அறிவியல்நிலைய வேளாண் விஞ்ஞாணிகள் மருதாச்சலம், பொற்கொடி,துணை வேளாண்மை அலுவலர் மணி தலைமையிலான வேளாண் விஞ்ஞாணிகள் குழுவினர் நேரடியாக வயலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது நெல்வயலில் பச்சை பாசியால் பயிர்கள் மஞ்சள்நிறத்தில் நெல்குருத்துகள் பாதிப்பு ஏற்படுவதின்காரணம் தண்ணீர் தண்மை, மண்ணின் தன்மை, பருவநிலை மாற்றம் போன்ற சில காரணங்களால் ஏற்படக்கூடியது. இவற்றினை ஆய்வு செய்து அதன்படி பயிர்பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளவேண்டும்.விவசாயிகள் தாங்களாக முடிவு செய்து எவ்விதமான மருந்துகளையும் தெளிக்கவேண்டாம்.வேளாண்மைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தும்படியாக பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்யவேண்டும்
.வயலில் பச்சிப்பாசிகளை குறைப்பதற்கு காப்பர் சல்பேட் ஏக்கருக்கு 2 கிலோ மணலில் கலந்து தெளித்துவிடவேண்டும்.பின்பு வயலில் தண்ணீர் இருப்பு அளவை குறைத்து பச்சிப்பாசிகளை களை எடுப்பதுபோல் கால்களால் மண்ணில் அழுத்திவிடவேண்டும்.அப்போது நெல்பயிருக்கு இயற்கையான முறையில் சூரிய ஒளியும்,காற்றும்,தேவையான சத்துக்களும் நேரடியாக பயிர்க்கு கிடைக்கும்.இவ்வாறு கிடைக்கும்போதுததான் நெல்பயிர் சிறப்பாகவும்,செழிப்பாகவும் வளர்ந்து எதிர்பார்க்கும் மகசூலும் கிடைக்கும் என வேளாண்மைத்துறை அதிகாரிகள்
விவசாயிகளுக்கு விளக்கி கூறினர்.இந்த ஆய்வின்போது உதவி வேளாண்மை அதிகாரிகள் சந்திரசேகர்,சிங்காரமூர்த்தி,ஆத்மா திட்டம் சந்தாணகிருஷ்ணன்,இளையராஜா இவர்களுடன் விவசாயிகள் என பலரும் உடனிருந்தனர்.