உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, June 16, 2020

புவனகிரி பேரூராட்சியில் முப்தாண்டுகளுக்கு மேலாக உள்ள குளத்தை பாதுகாக்க கோரிக்கை





கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் குறிஞ்சிப்பாடி செல்லும் சாலையில் கிழக்குபக்கமாக தாதன்குளம் எனும் குளம் உள்ளது.இக்குளமானது கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.குடிநீருக்கும், பொதுமக்கள் குளிப்பதற்கும், நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதுகாப்பதற்கு பயன்பட்டு வந்த இக்குளம் தற்போது குப்பைமேடாக மாறிவருகிறது.துர்நாற்றம் வீசி வரும் இக்குளத்தில் தற்போது பன்றிகளின் இருப்பிடமாகவும் இருக்கிறது.கோரைகள் தேவையற்ற பொருட்கள் போடும் இடமாக உள்ளது.தமிழக அரசு நீராதாரங்களை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வரும் வேளையில் அதிகாரிகள் இதனை நீண்டநாட்களாக தூய்மையற்று போட்டுவைத்திருப்பது வேதனையளிக்கிறது என இப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.அரசின் சிறப்புமிக்க திட்டமான குடிமராமத்து திட்டத்தின் மூலம் இதனை தூர்வாரி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவேரவண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.ஆனால் குளத்தில் உள்ள தண்ணீர் வற்றிப்போய் இன்று பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் கழிவுகள் தென்படுகின்றன.நீண்ட காலமாக பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு பயனளித்து வந்த இந்த குளத்தை அதிகாரிகள் தூர்வாரி பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.