உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, June 3, 2020

கீரப்பாளையம் வட்டாரத்தில் எந்திர நடவு வயல்களை வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு





கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தில் கீரப்பாளையம் வட்டார வேளாண்மை அலுவலகம் அமைந்துள்ளது.இங்கு வேளாண்மை துணை இயக்குநர் ரமேஷ் மாநிலத்திட்டம் கடலூர் வருகை தந்தார்.வட்டார அலுவலகத்திற்கு வருகை தந்த அவர் அனைத்து வேளாண்மை அதிகாரிகளுடன் கீரப்பாளையம் வட்டாரத்தில் உள்ள சாகுபடி பரப்பு. மற்றும் அனைத்து திட்டங்கள் பற்றியும் ஆலோசனை நடத்தினார்.இதனையடுத்து களஆய்விற்கு சென்ற அவர் கீரப்பாளைளயம் அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள விவசாயி மணிக்கண்டன் மற்றும் குணசேகரன் ஆகியோரது எந்திரநடவின்மூலம் குறுவை சாகுபடி செய்துள்ள நெல்வயலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது  கீரப்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜராஜன் உடனிருந்தார்.

விவசாயிகள் எந்திர நடவு மேற்கொள்வதின்மூலம் விதை அளவு,நாற்றாங்கால் பராமரிப்பு,மற்றும் சாகுபடி செலவு குறைவாக இருக்கிறது.அதிக மகசூலும் கிடைக்கிறது என்று வேளாண்மை துணை இயக்குநர் ரமேஷ் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.எனவே அனைத்து விவசாயிகளும் எந்திர நடவு மற்றும் திருந்திய நெல்சாகுபடி செய்தல்வேண்டும்.எந்திர நடவில் பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது கோனோவீடர் களை எடுக்கும் கருவி மூலம் நடவு நட்ட 15ம் நாள்,25நாம் நாள்,45 நாம் நாள் ஆகிய இடைவெளியில் களைஎடுப்பதின்மூலம் நெல் பயிரில் வேர்கள் அறுபட்டு புதிய வேர்கள் துளிர்விட்டு அதிக தூர்கள் உருவாகும்.இதனால் அதிக மகசூலும் கிடைக்கிறது.





நெல்பயிரில் தண்டு உருளும் பருவத்தில்  புரொப்பிகோனசோல் 400 மி.லி ஏக்கருக்கு தெளிப்பதினால் நெல்லில் கருப்பு மற்றும் பூஞ்சான நோய்கள் வராமல்  தடுக்கலாம். மேலும் நெல்லின் நிறமும் நன்றாகவும் இருக்கும்.

நெல்லில் குருத்து பூச்சி என்கிற தண்டு துளைப்பனால் குருத்து இலை காய்கிறது.இதனால் மகசூல் இழப்பு ஏற்படும்.இதனை கட்டுப்படுத்த ஏக்கருக்கு அசார்டிராக்டின் 400 மிலி,  அல்லது ஏக்கருக்கு கார்டாப்குளோரைடு 400 கிராம்,அல்லது குளோரிபைபாஸ் 400 மிலி ஏக்கருக்கு தெளித்து கட்டுப்படுத்தலாம்.

பயிரில் உருவாகும் பாக்டீரியா இலை கருகல் நோய் இலையில் இருபுறமும் முதலில் மஞ்சளாகவும், பிறகு காய்ந்தும் இருக்கும்.இதற்கு 20 சத சாணக்கரைசல் தெளிப்பதால் நோயை கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை துணை இயக்குநர் மாநிலத்திட்டம் கடலூர் ரமேஷ் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது துணை வேளாண்மை அலுவலர் கோபி,உதவி வேளாண்மை அலுவலர் ஆனந்தன், மற்றும் தாமரைக்கணி, விதை உதவி அலுவலர் அருள்பிரகாசம், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.