உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, June 27, 2020

புவனகிரி அருகே சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்




கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது தம்பிக்கு நல்லான்பட்டினம் கிராமம்.இக்கிராமத்தில் கடந்த நூறு ஆண்டுகளாக சுடுகாட்டுக்கு பாதை இல்லாமல் இருந்தது.இதனால் இறந்தவர்களை சுடுகாட்டு எடுத்துசெல்வதற்கு சிரமம் அடைந்துவந்தனர்.
இதனையடுத்து 25க்கு மேற்பட்ட விவசாயிகள் தாங்களாக முன்வந்து 500மீட்டர் நீளம், 50 லட்சம் மதிப்புள்ள விவசாய விளைநிலத்தை தானமாக தந்து பாதை அமைத்தனர்.இதனைக்கேள்வியுற்ற சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் நேரில் சென்று விவசாயிகளுக்கும் ,ஊராட்சிமன்றத்தலைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார். நூறு ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்னைக்கு தீர்வுகண்டு கிராமத்தின் ஒற்றுமையை நிருபித்த தம்பிக்குநல்லான்பட்டினம் கிராம விவசாயிகள்,மற்றும் ஊராட்சிமன்றத்தலைவர் ஆகியோரின்  செயல்பாடுக்கு ஈடுஇணை எதுவும் இல்லை என புகழாரமும் சூட்டினார்.மேலும்  தமிழக அரசின் சார்பில் பல்வேறு உதவிகளும் உடனடியாக பெற்றுத்தரப்படும் எனவும் உறுதியளித்தார்.இதன்பிறகு இதனைச்சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பேருந்து நிழற்குடை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜையையும் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஊராட்சிமன்றத்தலைவர் ஜோதிநாகலிங்கம் மற்றும் ஏராளமான அதிமுகவினர் உடனிருந்தனர்.