கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் வீராணம் ஏரியின் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி பூமிபூஜையோடு துவக்கப்பட்டது.தமிழக அரசின் டெல்டா மாவட்டத்திற்கான சிறப்பு நிதியில் துவக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் செயற்பொறியாளர் சாம்ராஜ் பங்கேற்று தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார்.இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பாசன வாய்க்கால் தூர்வாரப்படுவதால் இதன்மூலம் செல்லும் தண்ணீர் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் தேக்கப்பட்டு இப்பகுதியை சுற்றியுள்ள இருபத்தியைந்தாயிரம் ஏக்கருக்கு பாசன வசதியை தருகிறது.விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இப்பணிக்கான நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு இப்பகுதி விவசாயிகள் தங்களது நன்றியினை தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு உதவி பொறியாளர் பார்த்திபன்,லால்பேட்டை உதவிபொறியாளர் ஞானசேகரன், பாசன உதவியாளர் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.
Saturday, June 13, 2020
சேத்தியாத்தோப்பில் டெல்டா மாவட்டத்திற்கான சிறப்பு நிதியில் வீராணம் ஏரி பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை உயரதிகாரி துவக்கி வைத்தார்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் வீராணம் ஏரியின் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி பூமிபூஜையோடு துவக்கப்பட்டது.தமிழக அரசின் டெல்டா மாவட்டத்திற்கான சிறப்பு நிதியில் துவக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் செயற்பொறியாளர் சாம்ராஜ் பங்கேற்று தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார்.இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பாசன வாய்க்கால் தூர்வாரப்படுவதால் இதன்மூலம் செல்லும் தண்ணீர் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் தேக்கப்பட்டு இப்பகுதியை சுற்றியுள்ள இருபத்தியைந்தாயிரம் ஏக்கருக்கு பாசன வசதியை தருகிறது.விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இப்பணிக்கான நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு இப்பகுதி விவசாயிகள் தங்களது நன்றியினை தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு உதவி பொறியாளர் பார்த்திபன்,லால்பேட்டை உதவிபொறியாளர் ஞானசேகரன், பாசன உதவியாளர் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...