கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது சாத்தப்பாடி கிராமம்,இக்கிராமத்தில் புவனகிரி&குறிஞ்சிப்பாடி செல்லும் சாலையில் குறுகிய தரைப்பாலம் ஒன்று உள்ளது.இந்த சாலையில் ஏராளமான போக்குவரத்து இருந்து வருகிறது.அதனால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இதனையடுத்து இங்குள்ள தரைப்பாலத்தை உடனடியாக மாற்றி தரமான பாவமாக அமைத்திடவேண்டும் என அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து தமிழக அரசு பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று சாத்தப்பாடி தரைப்பாலத்தை புதிய உயர்மட்ட பாலம் அமைக்க நிரந்தர வெள்ளசேத சீரமைப்பு திட்டத்தில் ரூ.3 கோடியை ஒதுக்கியது.மேலும் உடனடியாக பாலம் கட்டுவதற்கான உத்தரவையும் அது பிறப்பித்தது.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் புதிய பாலம் கட்டுவதற்கான பூமிபூஜை போடப்பட்டது.அப்போது பதிலளித்த அதிகாரிகள் தமிழக அரசின் உத்தரவுப்படி, கிராமமக்களின் நீண்டநாளைய கோரிக்கையை நிறைவேற்றும் பொறுட்டு பாலத்தின் கட்டுமானப்பணிகள் போர்க்கால அடிப்படையில் துவக்கப்படும் என்று தெரிவித்தனர்.ஆனால் பூமி பூஜை போட்டதோடு பாலத்தின் கட்டுமானப்பணி நிற்பதால் இதனை எப்போது கட்டி முடிக்கப்படும் என பொதுமக்கள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளனர்.பொதுமக்கள்,பள்ளி,கல்லூரி,மாணவர்கள்,அனைத்து வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலரின் நலனை காக்கவேண்டிய இப்பாலம் இன்னமும் கட்டுமான பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.அதிகாரிகள் உடனடியாக கட்டுமானப்பணிகளை துவக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Saturday, June 13, 2020
புவனகிரி அருகே கிடப்பில் போடப்பட்ட 3 கோடி பாலப்பணி எப்போது துவக்கப்படும்? பொதுமக்கள் கேள்வி

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...