கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வடப்பாக்கம் கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் சிதம்பரம்&சேத்தியாத்தோப்பு சாலையோரம் கொள்ளிடம் கூட்டுகுடிநீர்த்திட்டம் பைப்லைன் செல்கிறது.இந்நிலையில் இந்த கொள்ளிடம் கூட்டுகுடிநீர்த்திட்ட பைப்லைன் அடிக்கடி சேதமேற்பட்டு உடைவதால் அதிலிருந்து தண்ணீர் வெளியேறி சாலைகளில் வழிந்தோடுகிறது.இதனால் இந்த பைப்லைனிலிருந்து குடிநீர் பெறும் பல்வேறு கிராமமக்கள் பெரிதும் சிரமம் அடைகிறார்கள்.குடிநீரும் மாசு அடைகிறது.இந்த வழியாக செல்லும் பைப்லைன் கடந்த பலமாதங்களுக்கு முன்பு கூட இதனருகில் மிகப்பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் அதிகளவில் சாலைகளில் வழிந்தோடி சேதமானது.தமிழக அரசு மக்களின் நலனை முன்னிட்டு எடுத்துள்ள முயற்சியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் கொள்ளிடம் கூட்டுகுடிநீர்த்திட்ட பைப்லைன் இவ்வாறு அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துவருகிறார்கள்.மேலும் இதே வழித்தடத்தில் உள்ள இடையன்பால்செரி கிராமத்திலும் சிறிய அளவில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர்வெளியேறுவதாக கிராமமக்கள் தெரிவித்தனர்.தற்போதைய நிலையில் ஒவ்வொரு துளி தண்ணீரும் தங்கத்தைவிட மதிப்பு மிக்கது.தமிழக அரசின் மக்களுக்கான சிரமங்களை போக்கும் தீவிரமான செயல்பாட்டை கண்டு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இங்குள்ளவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
Tuesday, June 2, 2020
குடிநீர் பைப்லைன் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதி

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...