உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, June 1, 2020

சேத்தியாத்தோப்பு,புதிய மற்றும் பழைய பாலத்தில் ஓரங்களில் கிடக்கும் மண் அள்ளப்படுமா? வாகன ஓட்டிகள் கோரிக்கை




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பழைய மற்றும் புதிய பாலங்கள் உள்ளன.புதிய பாலத்தில் இருசக்கர, கனரக வாகனம், பேருந்துகள் போன்றவை செல்கின்றன.பழைய பாலத்தில் இருசக்கர வாகனம், பொதுமக்கள் போன்றவர்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.இந்நிலையில் இப்பாலத்தில் பாலத்தின் ஓரங்களில் மண்துகள்கள் படிந்து வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகிறது.இதுகுறித்து வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் தெரிவிக்கும்போது பாலத்தின் அடியில் ஆற்றுமணல் கிடப்பதால் அவை காற்றில் துகள்களாக அடித்துவரப்பட்டு பாலத்தின் ஓரங்களில் சேருகின்றன.மேலும் பல்வேறு வாகனங்கள் பாலத்தில் செல்வதால் அவற்றினால் ஏற்படும் மண்துகள்களும் படிந்து கிடக்கின்றன.இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தில் செல்லும்போது மற்ற வாகனங்களுக்கு வழிவிடுவதில் சிரமம் ஏற்பட்டு மண்ணில் சிக்கிக்கொள்ளநேரிடுகிறது.சில நேரத்தில் விபத்து அபாயமும் ஏற்படுத்துகிறது.எனவே பாலத்தில் உள்ள மண்ணை அள்ளி புதிய பாலம் மற்றும் பழைய பாலத்தினை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் எப்பணிகளையும் மேற்கொள்ளாமல் அமைதிகாத்து வருகிறார்கள்.தற்போது நீண்ட ஊரங்கு உத்தரவிற்கு பிறகு வாகன போக்குவரத்து தொடங்கியிருக்கும் நிலையில் பாலங்களின் ஓரங்களில் மண் படிவது அதிகரித்துக்கொண்டே இருக்கும். எனவே அதிகாரிகள் பாலத்தில் படியும் மண்ணை அவ்வப்போது அள்ளி பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் எவ்விதமான இடையூறும் இல்லாமல் நடவடிக்ககை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின்கோரிக்கையாக இருக்கிறது.