உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, June 13, 2020

சேத்தியாத்தோப்பு பகுதிகளில் கால்நடைகளைத்தாக்கும் மர்மநோய் கண்டுகொள்ளாத கால்நடை மருத்துவர்கள்



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதிகளில் ஏராளமானவர்கள் கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள்.அதனையே தங்களது வாழ்வாதாரமாகவும் கொண்டும் இருந்து வருகிறார்கள்.தமிழக அரசு தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் எவ்விதத்திலும் பாதிப்படையக்கூடாது என்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.அதனை பலரும் வரவேற்று பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.இவ்வாறான சூழலில் சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது கால்நடை வளர்ப்பவர்கள் பலரும் வேதனையடைந்து வருகிறார்கள்.அதற்கு காரணம் இப்போது பலபகுதிகளில் இருக்கும்  கால்நடைகளை மர்மநோய் தாக்கத்தொடங்கியிருக்கிறது.இதன் அறிகுறியாக மாடுகளின் உடலில் மஞ்சள் கலரில் திட்டுத்திட்டாக தேமல்படலம் வளர்ந்துள்ளது.இவ்வாறு உள்ள மாடுகளில் இயல்பாக இல்லை.படுத்திருந்தால் எழுந்திரிக்கமுடியாமலும், கால்களில் வீக்கம் ஏற்பட்டும் உள்ளன என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வந்த கால்நடைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதைக்கண்டு அதனை வளர்ப்பவர்களும் கண்ணீர்மல்க வலம் வருகிறார்கள்.இது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் அதுப்பற்றிய அக்கரையே இல்லாமல் இருக்கிறார்கள் என்றும், இதுபோன்ற நோய்த்தாக்குதல் எல்லா இடத்திலும் இருக்கிறது நாங்கள் என்ன செய்ய? என்று கால்நடைகளை வளர்ப்பவர்களிடமே கேள்விக்கேட்பதாகவும் அவர்கள் பெரும் சோகத்துடன் தெரிவிக்கிறார்கள்.சேத்தியாத்தோப்பு,பின்னலூர், எறும்பூர்,வளையமாதேவி,சின்னநெற்குணம், வீரமுடையாநத்தம்,பெரியநற்குணம்,ஆதனூர், அகரஆலம்பாடி,முகந்தரியாங்குப்பம்,அள்ளூர், பூதங்குடி,சாத்தமங்கலம்,சக்திவிளாகம்,பொன்னங்கோவில் உள்ளிட்ட பத்துக்கமேற்பட்ட கிராமங்களிலும் இதுபோன்ற கோளாறுகளால் கால்நடைகள் அவதியுற்று வருகின்றன.இதனை  கால்நடைத்துறையினர் கண்டறிற்து கால்நடைகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள மர்மநோய்க்கு சரியான சிகிச்சையளித்து தங்களது கால்நடைகளையும், தங்களது வாழ்வாதாரத்தையும் காக்கவேண்டும்என அவர்கள் கால்நடைத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.எப்பவும்போல் அமைதியாக இருக்கும் கால்நடைத்துறை அதிகாரிகள் இப்பவும் அமைதியாக இல்லாமல் தீவிரமாக களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின்கோரிக்கையாக இருக்கிறது.