கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தில்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் வழிகாட்டுதலின்படி இ.2592 கீரப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இதில் தலைவர் சரவணன் ஏற்பாட்டில் கொரானா தொற்றுவிலிருந்து பொது மக்களை காப்பாற்றி வரும், இந்த கடன் சங்கத்திற்கு உட்பட்ட 7 ஊராட்சிகளில் பணியாற்றும் 100 தூய்மைப்பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரணம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் துணை தலைவர் விநாயகமூர்த்தி, சாக்காங்குடி கூட்டுறவு சங்க தலைவர் கருப்பன், கீழமணக்குடி கூட்டுறவு சங்க தலைவர் தனகோவிந்தராஜன் ,ஒன்றிய கவுன்சிலர் இராதாகிருஷ்ணன் , மாவட்ட மாணவரணி வீரமூர்த்தி, கீரப்பாளையம் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் அன்பரசன், கீரப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கீரண், வயலூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜி மற்றும் இ.2592 கீரப்பாளையம் தொடக்க வேளாண்மை சங்க செயலாளர் செந்தில்குமார் ,நிர்வாகக்குழு இயக்குனர்கள் திருநாராயணன்,கபிலன்,ஜெயராஜ்,ராமலிங்கம் பிள்ளை, மணி, புவனேஸ்வரி,பூங்குழலி,முருகானந்தன் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் புவனகிரி மனோகரன், திட்டை கதிரவன் ,இசை பாலமுருகன்,மூங்கிலடி உத்திராபதி , கீரை ஜெயச்சந்திரன் , கம்யூட்டர் இயக்குநர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர், நிவாரண உதவிகளை பெற்றுக்கொண்ட தூய்மைப்பணியாளர்கள் தமிழக அரசுக்கு தங்களது நன்றியினை தெரிவித்தனர்.

