உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, May 9, 2020

புவனகிரி அருகே உளுத்தூர் ஊராட்சியில் அதிமுக ஒன்றிய பெருந்தலைவர் சிவப்பிரகாசம் தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்



கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது உளுத்தூர் ஊராட்சி.இந்த ஊராட்சியில் பத்துக்குமேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் டேங்க் ஆப்ரேட்டர்கள் உள்ளனர்.இவர்களுக்கு தற்போதைய கொரானோ நோய்த்தொற்று கால சிறப்பு பணிசெய்து வருவதை கவுரவிக்கும்விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அறிவுறுத்தல்படி, கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் அருண்மொழித்தேவன் வழிக்காட்டலில் புவனகிரி ஒன்றிய பெருந்தலைவரும், புவனகிரி ஒன்றிய கழக செயலாளருமான சி.என்.சிவப்பிரகாசம் கிராமத்திலுள்ளவர்களுக்கு அரிசி,காய்கறி, மளிகை, கபசுர குடிநீர்,முககவசம் உள்ளிட்டவற்றை வழங்கி துவக்கி வைத்தார்.இதில் புவனகிரி வட்டார வளர்ச்சி அதிகாரி ரவிச்சந்திரன்,அதிமுக ஊராட்சி கழக செயலர் ஜெயசீலன், சபரி,அதிமுக ஒன்றிய கழக துணை செயலாளர் இந்திராகணேசன்,ஊராட்சி செயலர் முருகன்,அதிமுக அனைத்து கிளை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.உளுத்தூர் ஊராட்சியிலு உள்ள 500க்கு மேற்பட்ட  அனைத்து குடும்பங்களுக்கும் வீடு வீடாக நலத்திட்ட உதவிகள் கொடுக்கும் பணியையும், நிகழ்ச்சிக்கான அனைத்து ஒருங்கிணைப்பையும் ஊராட்சி மன்ற தலைவர் ரோஜாவள்ளி கணேசன் செய்திருந்தார்.