உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, February 4, 2020

சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் செயல்விளக்கம்




சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் செயல்விளக்கம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் கீரப்பாளையம் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் செயல்விளக்கம் நடைபெற்றது.இத்திட்டத்தின்மூலம் தற்போது இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் உளுந்து விதைப்பு செய்துள்ள விவசாயிகளுக்கு சாகுபடி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.இதில்கடலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் மத்தியத்திட்டம் வேல்விழி தலைமை வகித்தார்.கீரப்பாளையம் வட்டாரவேளாண்மை உதவி இயக்குனர் பிரேமலதா முன்னிலை வகித்தார்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலூர் வேளாண்மை துணை இயக்குநர் மத்தியத்திட்டம் உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு உளுந்து சாகுபடியில் கையாளவேண்டிய தொழில்நுட்பம் குறித்தும்,உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பதுபற்றியும் விளக்கமளித்து பேசினார்.மேலும் அவர் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்களை வழங்கி விவசாயிகள தெளிப்பு நீர்பாசனம் மற்றும் சொட்டுநீர்பாசனம் பற்றியும், பாரதபிரதமரின் விவசாயிகளுககான ஓய்வூதியத்திட்டம்,ஊக்கத்தொகைப்பற்றியும் எடுத்துக்கூறி விவசாயிகள் இதனை சரியாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று லாபம்  அடையவேண்டும் எனவும் அவர் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.இதன் பின்பு வலசக்காடு கிராமத்தில் உளுந்துபயிர் சாகுபடி வயலையும் நேரில் பார்வையிட்டு வயல்வெளி ஆய்வுகளையும் மேற்கொண்டார்.இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துணை அலுவலர் கோபி,உதவி வேளாண்மை அலுவலர் தாமரைக்கனி,முத்துசரவணன், உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் என பலரும் உடனிருந்தனர்.