உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, May 12, 2020

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு சேத்தியாத்தோப்பு அரிமாசங்கத்தினர் வாழ்த்து




செவிலியர் பணியில் தம்மை அர்ப்பணித்து பெரும் போற்றுதலுக்குரியவராக திகழ்ந்தவர் நைட்டிங்கேல் அம்மையார். நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளான மே 12 உலக செவிலியர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1974-ம் ஆண்டு முதல் உலக செவிலியர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு நைட்டிங்கேல் அம்மையாரின் 200-வது பிறந்த நாள் ஆண்டு.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சேத்தியாத்தோப்பு அரிமாசங்கம் சார்பில் சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு அரிமாசங்க தலைவர் அன்பழகன்,மாவட்ட தலைவர் மணிமாறன்,துணை தலைவர் செங்குட்டுவன், சேத்தியாத்தோப்பு பொதுநல மருத்துவர் டாக்டர் பரணிதரன் ஆகியோர் சுகாதார நிலையத்தில் உள்ள இருபதுக்குமேற்பட்ட செவிலியர்களுக்கு அவர்களின் அளப்பறிய சேவைகளை பாராட்டி,உற்சாகப்படுத்தியும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.மேலும் செவிலியர்களுக்கு முககவசம்,பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்பசுகாதாரநிலைய மருத்துவர் டாக்டர் லலிதாவிடம் வழங்கினார்கள்.இதனை அனைத்து செவிலியர்களும் உற்சாகமாக கைதட்டி வரவேற்பு தெரிவித்தனர்.