கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் தற்போதைய ஊரடங்கு காலத்தில் சிரமமடைந்துள்ள பொதுமக்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் பாரத பிரதமர் மோடியின் அறிவுறுத்தல்படியும், மாநில தலைவர் எல்.முருகன் வழிக்காட்டலிலும் இன்று இரண்டாயிரம் பேர்க்கான உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கேபிடி இளஞ்செழியன் தலைமை வகித்தார்.கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு இருந்து வரும் நிலையில் காவல்துறை,துப்புரவு பணியாளர்,மருத்துவதுறை,பேரூராட்சி பணியாளர்கள்,முதியவர்கள் என அவர்களுக்கு இலவசமாக மூன்று வேளையும் உணவு வழங்கி வந்தனர். இந்நிலையில் தற்போது சேத்தியாத்தோப்பில் உள்ள பொதுமக்களுக்கு தினமும் இரண்டாயிரம் பேர்க்கான உணவு பொட்டலங்கள் வழங்கும் பணி துவங்கியது.
இந்த உணவு பொட்டலங்கள் வாகனங்கள் மூலம் அனுப்பிவைத்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.தொடர்ந்தும் பணிகள் நடைபெறுகிறது எனவும் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார் மாவட்ட சிறுபான்மை அணித்தலைவர் அப்துல்ரகுமான்,ஒன்றிய பொதுச்செயலாளர் ராஜா,நடணமூர்த்தி,ராமதாஸ்,ஞானசேகரன்,பாஸ்கர், வெங்கடேசன்,உள்ளிட்ட மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
வரலாற்றில் அட்சய பாத்திரம் கேள்விப்ற்றிருப்போம்.அது அள்ள அள்ள குறையாமல் பசித்தோறுக்கு உணவளித்துக்கொண்டே இருக்கும்.அப்படி ஒரு அட்சய பாத்திரம் நிஜத்தில் இருந்தால் எப்படி இருக்கும்? ஆம் அப்படி ஒரு அட்சயபாத்திரமாக இருந்து வருகிறார் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கே.பி.டி இளஞ்செழியன்.தற்போதைய கொரானோ நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கைப் பணிகளுக்கான ஊரடங்கு காலக்கட்டத்தில் கடந்த முதல் ஊரடங்கிலிருந்து தற்போதுள்ள மூன்றாவது ஊரடங்கு வரை காவல்துறை, மருத்துவ துறை, ஊர்க்காவல்படை,தீயணைப்புத்துறை,பேரூராட்சி பணியாளர்கள், சுகாதார துப்புரவு பணியாளர்கள், செய்தியாளர்கள் என தினமும் முந்நூற்றியம்பது பேர்க்கு மேல் மூன்று வேளையும் தன்னுடைய சொந்த செலவில் உணவளித்து வந்துள்ளார் கேபிடி இளஞ்செழியன்.அறுசுவை உணவோடு, வாரநாட்களில் அசைவ உணவுகளோடும் சிறப்பாக உணவை தந்தவர்.இதுப்பற்றி அவர் தெரிவிக்கும்போது மக்கள் பணியில் தங்களை இணைத்து பிறர்நலத்திற்காக உழைத்திடும் இவர்களுக்கு நாங்கள் செய்வது சிறு சிறு உதவிகள் மட்டுமே.அவர்கள் வயிறார சாப்பிட்டு தங்களது பணியை தொய்வில்லாது தொடர்ந்து செய்திட வேண்டும் என்பதே எங்களது நோக்கம் அமைதியாக தெரிவித்தார்.இதுவரை கிட்டத்தட்ட இருபத்திநான்காயிரம் பேர்க்கு உணவளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.இது பிறருக்கு கொடுக்கவேண்டும் என்று நினைப்பவர்களால் மட்டுமே முடியும்.








