உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, May 12, 2020

சேத்தியாத்தோப்பு அருகே அகரஆலம்பாடி கிராமத்தில் புவனகிரி ஒன்றிய பெருந்தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் நிவாரணம் வழங்கல்



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது அகரஆலம்பாடி கிராமம்.இக்கிராமத்தில் சுமார் எழுநூறுக்குமேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.இவர்கள் தற்போதைய சூழலில் ஊரடங்கு உத்தரவால் பல்வேறு சிரமம் அடைந்துள்ளனர்.அதனடிப்படையில் தமிழக அரசு தங்களுக்கு உதவவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உத்தரவின்பேரில் அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் நேரில் பங்கேற்று, புவனகிரி ஒன்றிய பெருந்தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் 700க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி,காய்கறி,கபசுரகுடிநீர்,முககவசம் உள்ளிட்டவைகளை வழங்கினார்.தொடர்ந்து ஒவ்வொரு குடும்பங்களுக்கும் நேரில் நிவாரணபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.






இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு உட்கோட்ட டிஎஸ்பி ஜவஹர்லால்,எஸ்ஐ மாணிக்கராஜா,புவனகிரி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி ரவிச்சந்திரன்,விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன்,ஊராட்சி கழக செயலர் ஜெயசீலன்,அகரஆலம்பாடி ஊராட்சி மன்றத்தலைவர் அன்பழகன்,வேலுபிள்ளை, அண்ணாதுரை,சபரி,ஜபருல்லாகான் உடனிருந்தார்.நிவாரண உதவிகளை பெற்றுக்கொண்ட கிராமமக்கள் தமிழக அரசுக்கு தங்களது  நன்றியினை தெரிவித்தனர்.