கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பழையபாலம் அமைந்துள்ளது.இப்பாலம் நூற்றியம்பது ஆண்டுகளை கடந்த பழமையான பாலம்.இதில் தற்போது போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பாலத்தில் பலக்கட்டங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது பாலத்தில் உள்ள இரண்டு பக்க பக்கவாட்டு சுவற்றின் உயரம் குறைந்துவிட்டது.நடுவில் உள்ள சாலையும் மேலே வந்துவிட்ட காரணத்தினால் இப்பாலத்தில் செல்லும் பொதுமக்கள், இருசக்க வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் பாலத்தை கடந்து செல்கின்றனர்.இதற்கு காரணம் பக்கவாடடு சுவற்றின் உயரம் குறைவாக இருப்பதால் சாதாரணமாக காற்று அடித்தால்கூட நாம் எதிர்பாராமல் ஆற்றுக்குள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது.சிறுவர்கள்,குழந்தைகளுடன் இப்பாலத்தை கடக்கும்போது பலரும் பெரும் கவணத்துடன் கடந்து செல்கிறார்கள்.இப்பாலத்தில் உயரம் குறைவான காரணத்தினால் பல விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.அதனைடிப்படையில் இப்பகுதியினர் பாலத்தின் பக்கவாட்டு சுவற்றின் உயரத்தை அதிகரிக்கவேண்டும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.இனி இப்பழைய பாலத்தில் எவ்விதமான விபத்துக்களும் ஏற்படாமல் பொதுமக்கள் பாதுகாப்போடு பாலத்தை கடப்பதற்கு அதிகாரிகள் விரைந்து சேத்தியாத்தோப்பு பழையபாலத்தின் பக்கவாட்டு சுவற்றின் உயரத்தை அதிகரிக்கவேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
Saturday, May 30, 2020
சேத்தியாத்தோப்பு பழைய பாலத்தில் பக்கவாட்டு சுவற்றின் உயரத்தை அதிகரிக்க கோரிக்கை

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...