கடலூர் மாவட்டம் ஒரத்தூர் அருகே கிளியனூர் கிராம பகுதியில் வாய்க்காலை கடக்கும் அதிக அழுத்தம் கொண்ட மின்கம்பி செல்கிறது.இந்த மின்கம்பியானது தாழ்வாகவும், மனிதர்கள் நடந்துசெல்லும்போது தலையில் இடிக்கும் நிலையிலும் இருப்பதால் இதனை சரிசெய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இப்பகுதி வயல்வெளி நிறைந்த பகுதி.இந்த தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பி செல்லும் வழியாக வயலுக்கு செல்லும் விவசாயிகள்,விவசாய வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளிகள்,ஆடு,மாடுகள் மேய்ப்பவர்கள்,உழவுக்கு செல்லும் உழவு வாகனங்கள் என பலவும் இவற்றை கடந்து செல்லவேண்டிய நிலையில் உள்ளது.ஒவ்வொரு முறையும் இதன்வழியாக கடக்க முற்படும்போது வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு செல்கிறோம்.கடந்த ஓராண்டுக்கு மேலாக இப்படியே இருந்து வரும்நிலையில் இதனை சரிசெய்யாமல் அதிகாரிகள் மவுனம் காப்பது ஏனென்று தெரியவில்லை.ஏதேனும் விபத்துக்களோ, அசம்பாவிதங்களோ ஏற்படும்முன் அதிகாரிகள் இதனை சரிசெய்தால் புண்ணியமாக இருக்கும் என இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.இனியும் அலட்சியம் காட்டாமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பலரின்விருப்பமாக உள்ளது.
Saturday, May 30, 2020
ஒரத்தூர் அருகே தாழ்வான மின்கம்பி சரி செய்ய விவசாயிகள்,பொதுமக்கள் கோரிக்கை

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...