உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, May 30, 2020

வீரமுடையாநத்தம் கிராமத்தில் சாலை வளைவு மெகா பள்ளம் சரிசெய்யப்படுமா?



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வீரமுடையாநத்தம் கிராமம்.இக்கிராமத்தில் முக்கிய போக்குவரத்து சாலையாக சேத்தியாத்தோப்பு&விருத்தாசலம் சாலை செல்கிறது.இப்பகுதியில் செல்லும் சாலை கிராமப்புற சாலைகளுக்கு உண்டான வளைவு நெளிவுகளோடு இருக்கும் சாலையாக இருக்கிறது.இந்நிலையில் இக்கிராமத்தின் நுழைவாயில் வளைவில்  மிகப்பெரிய பள்ளம் சாலையின் நடுவில் உள்ளது.இப்பள்ளம் பலமுறை சரிசெய்யப்படடும், திரும்ப திரும்ப இவ்விடத்திலேயே பள்ளம் ஏற்பட்டு வருகிறது.கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த சாலைப்பள்ளம் இருக்கிறது.இதில் ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக இக்கிராமமக்கள் தெரிவிக்கிறார்கள்.அவர்கள் கூறும்போது சாலையின் முக்கிய வளைவில் இப்பள்ளம் இருப்பதால் இதனைக்கடக்கும் வாகன ஓட்டிகள் பள்ளத்தை கவனித்து வாகனத்தை செலுத்துவதற்குள் எதிரில் வளைவில் வரும் வாகனத்தில் மோதிவிடும் அப்£யம் இருப்பதால் அதனை சமாளித்து வாகனத்தை ஓட்டுவதற்குள் விபத்துக்கள் ஏற்படுகிறது.மேலும் தற்போது வெய்யல்காலத்தில் இவ்விடம்மெகா பள்ளமாக இருக்கிறது.மழைக்காலத்தில் இந்த பள்ளத்தில் மூன்றடி அளவிற்கு தண்ணீர் வடியாமல் நிற்கும்.இதனாலும் வீரமுடையாநத்தம் கிராமமக்ள் மற்றும் இதனை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் என பலரும் சிரமமடைவார்கள்.இந்த பள்ளத்தை பலமுறை கிராமமக்களோ சரிசெய்து பார்த்தும் அவர்களாலும் இதற்கு நிரந்தர தீர்வினை எட்டமுடியவில்லை.பின்பு அவர்களும் சோர்ந்துபோய் விட்டனர்.ஆனால் இதனை சரிசெய்ய வேண்டும் என தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று வருகிறார்கள்.இருந்தாலும் இப்பள்ளத்திற்கு நிரந்தர தீர்வுதான் கிடைத்தபாடில்லை.தற்போது விரைவில் மழைக்காலம் துவங்க உள்ளதால் அதற்கு முன்பாக இந்த மெகா பள்ளத்தை தரமான கான்கீரிட் கலவைகொண்டு மேடாக்கி தண்ணீர் தேங்காதவாறு சாலை அமைத்து தரவேண்டும் என அவர்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.