உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, May 14, 2020

சேத்தியாத்தோப்பு அருகே மழவராயநல்லூர் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கல்


சேத்தியாத்தோப்பு அருகே
மழவராயநல்லூர் ஊராட்சியில்
தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கல்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது மழவராயநல்லூர் ஊராட்சி.இந்த ஊராட்சியில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.ஊராட்சியில் உள்ள ஐந்துக்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்,தூய்மைக்காவலர்கள் ஆகியோருக்கு ஊராட்சி மன்றத்தலைவர் பிருந்தாவதி வரதராஜன் தலைமையில் அரிசி,காய்கறி,மளிகை, கபசுர குடிநீர் முககவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.இதில் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றி அதிமுக பெருந்தலைவர் லதாஜெகஜீவன்ராம் பங்கேற்று பயனாளிகளுக்கு நிவாரணங்களை வழங்கினார்.

மழவராயநல்லூர் ஊராட்சியானது மாவட்டத்தில் சிறந்த ஊராட்சியாக மாற்றிடும்பொறுட்டு கிராமத்தின் பலபகுதிகளிலும் கண்காணிப்புக்கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.இதனால் கிராமத்தில் தேவையற்ற நடப்பது தவிர்க்கப்படுவதோடு கிராமத்தின் அமைதிக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.அதுபோல் கொரானோ நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனத்தின்மூலம் ஏற்கெனவே கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு அனைத்து வார்டுகளும் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஊராட்சி மன்றத்தலைவர் பிருந்தாவதி வரதராஜன் வெளிமாநில தொழிலாளர்களின்மேல் அக்கரைக்கொண்டு அவர்களின் வாழ்வாதாரம் காத்திடும் பொறுட்டு அவர்களுக்கு அரிசி, காய்கறிகள், உள்ளிட்ட தொகுப்பினை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத்துணை தலைவர்,ஊராட்சி செயலர் தேவராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.