உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, May 14, 2020

புவனகிரி அருகே நெல்லிக்கொல்லையில் கொரானோ பரவல் தடுப்பு கண்காணிப்பு மண்டல அதிகாரி ஏடிஜிபி வினித்தேவ் வான்கடே ஆய்வு




கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது நெல்லிக்கொல்லை கிராமம்.இக்கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து வருகை தந்த கணவன் மனைவிக்கு கொரானோ நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.உடனடியாக அவர்கள் வருவாய்துறை மற்றும் மருத்துவதுறை குழுவினர், காவல்துறை அதிகாரிகளின் உதவியோடு கடலூரில் உள்ள  கொரானோ நோய்த்தடுப்பு வார்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.இந்நிலையில் நெல்லிக்கொல்லை கிராமபகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட கொரானோ நோய் பரவல் தடுப்பு கண்காணிப்பு மண்டல அதிகாரி ஏடிஜிபி வினித்தேவ் வான்கடே வருகை தந்து ஆய்வு செய்தார்,கொரானோ நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.அப்போது விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார் , பயிற்சி ஏஎஸ்பி சினேகப்பிரியா., சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் ராமதாஸ்,எஸ்ஐ மாணிக்கராஜா,சிஜடி திருமுருகன், தலைமை காவலர் வேங்கடகிருஷ்ணன் போலீசாரும் உடனிருந்தனர்.