உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, May 14, 2020

சேத்தியாத்தோப்பில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநில தலைவர் வெள்ளையன் அறிவுறுத்தல்படி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் 37வது மாநில மாநாடு அரசு அறிவிப்பின்படி தமிழகத்தில் தற்போதைய கொரானோ நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.அதனால் அதனை முன்னிட்டு அதற்கு பதிலாக சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் தலைவர் மகாராஜன்,மாநில இணை செயலாளர் மணிமாறன் .ஆகியோர் தலைமை வகித்தனர். வியாபாரிகள் பக்கிரிசாமி,அரிமாசங்க தலைவர் அன்பழகன்,துணைத்தலைவர் செங்குட்டுவன், பொதுநல மருத்துவர் டாக்டர் பரணிதரன், சேத்தியாத்தோப்பு பேரூராட்சி  பணியாளர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ராமதாஸ், எஸ்ஐ மாணிக்கராஜா, பங்கேற்று பயனாளிகளுக்கு அரிசி, காய்கறி,மளிகை பொருட்கள், முககவசம், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை என வழங்கினார்கள். சேத்தியாத்தோப்பு பகுதியைச்சேர்ந்த தூய்மை பணியாளர்கள், பெரூராட்சி பணியாளர்கள், ஏழை எளியவர்களுக்கு ஒருவாரத்திற்கு தேவையான அரிசி,காய்கறிகள்,மளிகை, மருந்து பொருட்கள் கொண்ட தொகுப்பினை வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு போலீசார் உடனிருந்தனர்.முன்னதாக நோய் எதிர்ப்பு சக்தி ஹோமியோபதி மாத்திரை ஆர்சனிகம் 30 அனைவருக்கும் வழங்கப்பட்டது. நிவாரண உதவிகளை பெற்றுக்கொண்டவர் மாநில தலைவர் வெள்ளையனுக்கும், சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள் சங்கத்திற்கும் தங்களது நன்றியினை தெரிவித்தனர்.