கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளி.இப்பள்ளியில் சிறப்பாக கல்வி பயின்று வந்த 80க்கு மேற்பட்ட மாணவர்கள் தற்போதைய கொரானோ ஊரடங்கால் மிகவும் சோர்வடைந்திருந்தனர்.இவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த மாணவர்களுக்கு இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தட்சணாமூர்த்தி, துணை தலைமை ஆசிரியர் அம்பேத்கர்,சங்கரன், மணிக்கண்டன்,மகேஷ்,செல்வி,ரமேஷ்,கனிமொழி, உஷா,ஆனந்தகுமார், செந்தில்குமார்,மரியதாஸ், உள்ளிட்ட பத்துக்குமேற்பட்ட ஆசிரியர்கள் இணைந்து தங்களது சொந்த பணத்திலிருந்து பள்ளி மாணவர்களுக்கு ஒருவாரத்திற்கு தேவையான அரிசி,மளிகை,காய்கறி பொருட்கள் அடங்கிய தொகுப்பினை கொரானோ நிவாரணமாக வழங்கினர்.
இதில் வெய்யலூர் ஊராட்சி மன்றத்தலைவர் ராஜமோகன்,துணைத்தலைவர் கவிதாசுகுமார்,பெற்றோர் ஆசிரியர் சங்கம் ராமதாஸ்,ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று இந்நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு வெய்யலூர் கிராமமக்கள் உள்ளிட்ட பலரும் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.