உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, May 29, 2020

நெல் பயிரில் ஏற்படும் பருவகால சேதங்களை தவிர்க்க அரசு வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரடி கள ஆய்வு




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அகரஆலம்பாடி கிராமம் உள்ளது. இங்கு புவனகிரி வட்டார வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் சுதாமதி தலைமையில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் இந்திராகாந்தி, மண்டல ஆராய்ச்சி மையம், விருத்தாசலம், உழவியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் வேங்கடலஷ்மி,துணை வேளாண்மை அலுவலர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அகரஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயசங்க தலைவரும்,முன்னோடி விவசாயியுமான வேல்முருகன் வயலில் நெல்பயிரில் ஏற்பட்ட பருவகால   மாற்றம் குறித்து ஆய்வினை மேற்கொண்டனர்.ஆய்வின் முடிவில்  நெல்பயிரில் வேளாண்மைத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்பெற்று மருந்து தெளிக்கவேண்டும், பயிர் பராமரிப்பு முறைகளை மேற்கொள்ளவேண்டும்.விவசாயிகள் தாங்களாக மருந்துக்கடைகளில் விற்கும் மருந்தினை வாங்கி அடிக்ககூடாது.நெல் பயிரில் திடிரென்று எதிர்பாராத மாற்றம், சேதம் ஏற்பட்டால் அது கோடைகாலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைவால் உருவாகும் உப்பால் ஏற்படும் சேதம் என்பதை கருத்தில்கொள்ளவேண்டும். உடனடியாக விவசாயிகள் அதனை போக்கும்விதமாக வயலுக்கு வழக்கமாக தண்ணீர் பாய்ச்சும் போர்வெல்லில் இருந்து வேறு போர்வெல் மூலம் தண்ணீர் பாய்ச்சல் வேண்டும்.பருவகால மாற்றத்தினால் வயலில் படிந்துள்ள தீமைசெய்யும் பச்சை பாசியை தண்ணீரை வடிய வைத்து அந்த பாசிகளை மண்ணுக்குள்ளே கால்களால் அழுத்திவிடவேண்டும்.அல்லது பச்சைப்பாசிகளை முடிந்தளவு வயலிலிருந்து அப்புறப்படுத்தவேண்டும்.மேலும் இதுபோன்ற நிலை
நெல் வயலில் தொடர்ந்து ஏற்படாமல் இருக்க. விவசாயிகள் ஒரேமாதிரியாக  நெல் பயிரிடுவதை தவிர்த்து உளுந்து,சிறுதாணிய மாற்றுப்பயிர்களை பயிரிடவேண்டும்.



இதனால் .மண்வளத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டு மாற்றுப்பயிர்கள் நன்றாக வளரும்.அதனோடு மண்வளம் காப்பதற்கு இயற்கை தொழு உரங்கள், ஆட்டுப்புழுக்கை,மண்புழு உரம் உள்ளிட்ட இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயிககள் மண்வளம் அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். முக்கியமாக மீண்டும் மீண்டும் அதிகாரிகள் வலியுறுத்துவது  நெல்பயிர் உள்ளிட்ட மற்ற பயிர்களில் விவசாயிகள் பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது வேளாண்மைத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.அப்போதுதான் அதிகளவு மகசூல் எடுக்க முடியும்.விவசாயிகள் எக்காரணத்தை கொண்டும் தாங்களாக முடிவுசெய்து கடைகளில் விற்கும் மருந்துகளை வாங்கி பயிர்களுக்கு அடிக்ககூடாது எனவும் அனைத்து பகுதி விவசாயிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.இந்த ஆய்வின்போது  உதவி வேளாண்மை அதிகாரிகள் சிங்காரமூர்த்தி, சந்திரமோகன், அட்மாதிட்ட அலுவலர் சந்தாணகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.