உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, May 29, 2020

சேத்தியாத்தோப்பு அருகே மூன்றாயிரத்திற்கு மேற்பட்ட மாட்டுவண்டித்தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை




கடலூர் மாவட்டம் புவனகிரி,கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மூன்றாயிரத்திற்கு மேற்பட்ட மாட்டுவண்டித்தொழிலாளர்கள் உள்ளனர்.இவர்கள் கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஒரத்தூர் வெள்ளாற்று  பகுதியில் திறக்கப்பட்ட அரசு மாட்டுவண்டிக்கான மணல்குவாரியின் மூலம் மணல் எடுத்து விற்பனை செய்து  தங்களது வாழ்வாதாரத்தை நடத்திவந்தனர்.இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு அரசு மணல்குவாரி திடிரென்று மூடப்பட்டது.அதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.அன்றிலிருந்து தங்களது மாட்டுவண்டி,  மற்றும் மாடுகளையும் வருமானம் இன்றி பராமரிக்க முடியாமல் பெரிதும் சிரமமடைந்துவருகிறார்கள். இவ்வாறான சூழலில் மாட்டுவண்டித்தொழிலாளர்கள் மூன்றாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தமிழக அரசு மீண்டும் வெள்ளாற்றில் மாட்டுவண்டிக்கான மணல்குவாரியை திறக்க அனுமதித்து தங்களது வாழ்வாதாரம் காக்கவேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் தமிழக அரசு இப்பகுதியில் நடைபெறும் பல்வேறு  கட்டுமானப்பணிகளுக்கு மணல் இல்லாமல் பணிகள் நீண்டகாலமாக கிடப்பில் இருப்பதையும் கருணை அடிப்படையில் பரிசீலித்து மீண்டும் மணல்குவாரியை திறக்கவேண்டும் என கட்டிடப்பணிகளை மேற்கொள்வோரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.